நார்வேயில் மிதக்கும் சோலார் பேனல்.! செல்லூர் ராஜூக்கு தெரியாம போச்சு.!

சூரியனில் இருந்து மின்சாரம் எடுப்பது கிரீன் எனர்ஜி எனப்படுகின்றது. இதில் சூரியன், கடல் அலை ஆற்றல் , காற்று , நீர் உள்ளிட்டவைகள் அடங்குகின்றன.இதில் சுற்றுப்புறத்திற்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்காது. மேலும், இயற்கை வளங்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, உலக நாடுகளிடம் வளர்ந்து வருகின்றது.இந்நிலையில், நடுக்கடலிலும், நீர் நிலைகள் மேல் சோலார் பேனலை பரப்பி அதன் மூலம் மின்சாரம் செய்யும் நடைமுறை பல்வேறு நாடுகளிடம் இருந்து இருக்கின்றது.இதன் மூலம் நீர் ஆவியாவதையும் தடுக்க என்று ஆய்வுகள் செல்கின்றன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கதையை போல, இரண்டு விடயங்களும் சிறப்பானதாக செய்ய முடிவும். இதில நார்வே ஈடுபட்டுள்ளது. இந்த விஷயம் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு முன்னாடி தெரியாம போச்சு என்று ஒரு சில கிண்டல் அடிக்கவும் துவங்கியுள்ளனர்.நாம் இயற்கைக்கு மாற்றாக பொருட்களை நவீன உலகத்தில் பயன்படுத்தி வருகின்றோம். மேலும் இதனால் உலகம் வெப்ப மயமாகி வருகின்றது. இதனால் ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீர் ஆவியாகி வருகின்றது. மேலும், வறண்ட பாலை வனம் போல் உலகம் மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் 96 மில்லியன் மிதக்கும் பிளாஸ்டிக் பந்துகளை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெரிய குளத்தில் கொட்டி பரிசோதனை நடத்தினர்.பிளாஸ்டிக் பந்துகள் லாஸ்ஏஞ்சல்ஸ் குளம் முழுவதும் நிரப்பட்டதால், கடந்த 2015 ஆகஸ்ட் முதல் 2017 மார்ச் வரை 1.7 மில்லியன் கன மீட்டர் நீர் ஆவியாதலில் இருந்து தடுக்கப்பட்டது. திட்டம் வெற்றி பெற்றதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்தனர்.கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மா கோல்களை கொண்டு மதுரையில் உள்ள வைகைஅணையில் நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தெர்மா கோல்களை செல்லோ டேப்பால் ஓட்டி அணையில் அணையில் அவரே மிதக்க விட்டார்.10ச.கி.மீ அளவுள்ள வைகை அணைக்கு 300 தெர்மாகோல்களை செல்லோ டேப்பால் ஒட்டி பரிசல்களில் கொண்டு அணையில் விடப்பட்டது. அது வீசும் காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் தெர்மா கோல்கள் அனைத்தும் கரை ஒதுங்கின. இதைத்தொடர்ந்து டிவி, பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டல் செய்து செய்திகளும், கார்ட்டூன்களும் பறந்தன.

இன்று சீனா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நீர் நிலைகள் மீது மிதக்கும் சோலார் பேனல்கள் இருக்கின்றன.உலகத்தில் அதிக நீளமான சோலார் பேனல்களை சீனாவில் தான் இருக்கின்றது. இதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் அரபு நாடுகளிலும் இத்திடம் செயல்படுத்தப்படுகின்றது.கடல் மற்றும் நீர் நிலைகள் மீது மிதக்கும் சோலார் பேனல்கள் மற்ற நாடுகளில் இருந்தாலும் நார்வே நாட்டில் தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் சற்று வித்தியாசமாக இருக்கின்றது.இது எந்த வானிலை மாற்றம் இருந்தாலும், சோலார் பேனல்களுக்கு ஒன்றும் ஆகாது. சோலார் பேனல் சூடு ஆனாலும், அதை கடல் நீரின் மேற்பரப்பு குளிர் வித்து விடும். பனி, வெயில், மழை உள்ளிட்டவைகளையும் தாங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.வலைபோன்ற அமைப்பு ஏற்படுத்தி நார்வேயின் ஆஸ் கடல் பகுதியில் மிதக்கவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல்நீர் சோலார்பேனல் மேற்பரப்பில் உட்புகாது.கடல் நீர் உடப்புகாமல் இருக்க பாலிஸ்டர் உடன் பாலிமரால் பொறுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் பாலிமர் இருப்பதால், நீர் உட்புகாமல் பாதுகாக்கின்றது.

ஒரு கால் பந்தாட்ட மைதானம் போல் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், இதில் இருந்து 20 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் 2040 ஆம் ஆண்டில் கடல்சார் சூரிய சந்தை 500GW க்கு வளரும் என்று மதிப்பிடுகிறது.நமக்கு தேவையான மின்சாரமும் கிடைத்து விடுகின்றது. மேலும், நீர் நிலைகள் மீது சோலார் பேனல்கள் மிதப்பதால், நீர் ஆவியாதலும் ஓரே நேரத்தில் தடுக்கப்படுகின்றது. இது ஓரே கல்லில் இரண்டு மாங்காயாக கிடைத்து விடுகின்றது.இந்த திட்டம் மட்டும் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு தெரியாமல் போய் விட்டது. தெரிந்து இருந்தால் தெர்மாகோலுக்கு தீட்டிய திட்டம் போல், இதற்கு நிதி ஒதுக்கி மும்முரமாக செயல்படுத்தி இருப்பார். இதற்கு சோலார் பேனலுக்கு பதிலாக அவர் எதை பயன்படுத்தி இருப்பார் என்று தெரியவில்லை. இதுவும் கேளி கூத்தாகியிருக்கும்.நீர் நிலைகள் மேற்பரப்பின் மீது சோலார் பேனல் மிதப்பு மிதவை போன்று இருப்பதால் நீர் நிலைகள் ஆவியாது தடைபடுகின்றது. மேலும், சிறிய இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு இருப்பதால், நீர் வாழ் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன் தடைபடுவது இல்லை. இதனால் உயிரினங்கள் இறக்காது. முற்றிலும் நீர் ஆவியாதல் தடை படுகின்றது.