நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!

குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது.

அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.

பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன.

வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியின் முதல் திரைப்பட அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சிறந்த உள்ளடக்கம் மற்றும் பரந்து விரிந்த வீச்சைக் கொண்ட பிரம்மாண்ட படைப்பாக இத்திரைப்படம் இருக்கும் என்று தயாரிப்புக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்

Related posts:

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் ட்ராக்!

"மியூசிக் ஸ்கூல்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

மதிப்பிற்குரிய குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜு, இந்த வருடம் 2024ல் நடைபெற இருக்கும் 77வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல...

அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான 'புஷ்பா2:

நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது!

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'கண்ணே கலைமானே' இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது!

மாஸ் நாயகன் என்டிஆர், கொரட்டாலா சிவாவின் ’தேவாரா’ படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் ‘பத்தவைக்கும் பார்வைக்காரா...’ இப்போது வெளியாகியுள்ளது!