நடிகர் பிரதீப் ரங்கநாதன் பின்னணி பாடகராக அறிமுகமாகும் ‘சிங்காரி’!

‘டியூட்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்காகியுள்ளது. மேலும், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முந்திய படங்களான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

‘டியூட்’ படத்திற்கு சாய் அபயங்கரின் இசையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சிங்காரி’ பாடலை நடிகர் பிரதீப் ரங்கநாதன் பாடியிருப்பதன் மூலம் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். பாடல் வெளியான ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை அடுத்து ஆல் ரவுண்ட் எண்டர்டெயினர் என்பதை நிரூபித்துள்ளார் பிரதீப்.

சஞ்சய் செம்வியின் எனர்ஜிட்டிக்கான பாடல் வரிகளும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் கண்ணைக் கவரும் பாடல் உருவாக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் நிச்சயம் ஆடியோ- வீடியோ விஷூவல் ட்ரீட்டாக இந்தப் பாடல் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, ஆர். சரத்குமார், ஹிருது ஹாரூன், ரோகினி, ஐஸ்வர்யா ஷர்மா, டிராவிட் செல்வம் மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் Y ரவி ஷங்கர்,
இணைத்தயாரிப்பாளர்: அனில் யெர்னேனி,
எழுத்து-இயக்கம்: கீர்த்தீஸ்வரன்

Related posts:

‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

சிம்புதேவனின் புதிய பான்-இந்தியா படம் 'போட்' 5 மொழிகளில் வெளியாகிறது !

அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

’குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

மூட்டு தேய்மானம் # ஸ்டெம்செல் சிகிச்சை # டாஷ் மருத்துவமனை # சாதனை #

ஐ.எம்.டி.பியில் அதிக-தரமதிப்பீடு பெற்ற நடிகர் தனுஷ்11 திரைப்படங்களின் பட்டியல் !

VYOM எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு — “Untitled Production No.1” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் " சிறகன் " ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது !