திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் ஏ ஆர் ரகுமான்

திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் முயற்சி த என்ற புதிய இசை திட்டத்தை ஏ ஆர் ரகுமான் தனது பிறந்த நாளான நேத்திக்கு வெளியிட்டார். இதன் மூலம் தமிழக கிராமபுரத்தில் உள்ள இசையை உலக அளவில் கொண்டு செல்வதே தனது இலக்கு என்று அவர் கூறினார்.

கொஞ்சம் கிராமிய மணம் கமழும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர் கண்டியிலுள்ள திரைப்பட இசை ஒளிப்பதிவு மற்றும் படப்பிடிப்பு ஸ்டுடியோ வில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய வகையில் கொண்டு செல்லும் முயற்சியாக த என்ற இசை ஆசையை தனது பிறந்த நாளையொட்டி வெளியிட்டார்..

இதையடுத்து செய்தியாளர் பேசிய அவர் தற்போது நடைபெற்று வரும் விரும்பத்தகாத போர் போராட்டங்களால் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணங்கள் வேரூன்றி வருவதாகவும் இதிலிருந்து விடுபட இசை பேருதவி புரியும் என்றும் கூறியவர் பழமையை விரும்புவதாகவும் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிதான் தற்போது உருவாகியுள்ள த முயற்சி என்றும் சொன்னார்.

மேலும் த என்றாள் தமிழ் தாய் தந்தை தர்மம் தக்க தக்க திமி தா என்ற ரிதம் என விளக்கமளித்தார் அப்போது செய்தியாளர் ஒருவர் கண்ணதாசன் பாடலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் இன்றுவரை நினைவில் இருப்பது போன்றே தற்போதைய பாடல் வரிகள் புரியவில்லையே என கேட்டபோது பெரும்பாலான பாடல்கள் அப்படி இல்லை என்றும் நல்ல சிஸ்டம் வாங்கி அதுலே கேட்டா கேட்கும் எனவும் ஒரு சில பாடல்கள் அது போன்று இருப்பதாகவும் ஏ ஆர் ரகுமான் தெரிவிச்சார்

முத்தாய்ப்பாக ஒரு நிருபார் நாட்டில் எவ்வளவோ பிரச்னை என்று ஆரம்பிக்கும் போதே எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி சிரித்தபடி விடை பெற்றுக் கொண்டார்