திருநங்கைகள் என்ற பெயர் மாற்றம் ? கொதித்தெழுந்துள்ள மூன்றாம் பாலினத்தவர்!!

அரசு ஆவணங்களில் இருந்து ‘திருநங்கை’ என்ற வார்த்தை நீக்கம்?தமிழக அரசின் ஆவணங்களிலிருந்து “திருநங்கை” என்ற வார்த்தை நீக்கப்பட்டதாக கூறும் மூன்றாம் பாலினத்தவர்கள், அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.அரசு ஆவணங்களிலிருந்து திருநங்கை என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள மூன்றாம் பாலினத்தவர், அரசின் இந்த நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில். அடுத்த ஆண்டு ஏப்ரல் 15 -ஆம் தேதி (15-04-2020) திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சமூக நலத் துறை அண்மையில் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில், “திருநங்கைகள் தினத்தையொட்டி, அன்றைய நாளில் நடைபெறும் விழாவில் சிறந்த திருநங்கைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையை மேற்கோள்காட்டி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், “தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் விழாவில், விருதுகளை பெற மாவட்ட அளவில் தகுதியான நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளும் அதில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவில், திருநங்கைகள் என இடம்பெற்றிருந்த வார்த்தைகள் அனைத்தும் அடிக்கப்பட்டு, அதற்கு பதிலாக மூன்றாம் பாலினத்தவர் என பேனாவால் கைப்பட எழுதப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகத்தின் இந்தச் செயலுக்கு திருநங்கைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மூன்றாம் பாலினத்தவர் என்றும், தரக்குறைவான வார்த்தைகளாலும் அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் திருநங்கைகள் என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.