திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் மின்சார வாரியத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்
கேள்வி நேரத்தின்போது திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் ,விவசாயிகள் நிறைந்த பூனி மாங்காடு கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்துப் பேசிய , அமைச்சர் தங்கமணி குறைந்த மின் அழுத்தத்தை போக்க மின் மாற்றி அமைக்கப்படும் என்றும் மின்சார வாரியத்திற்கு இடத்தை தேர்வு செய்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்
சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் வேளச்சேரி மடிப்பாக்கம் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் பாலவாக்கத்தில் துணை மின்நிலையம் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது அங்கு துணை மின் நிலையம் அமைக்கபடுமா என்று கேள்வி எழுப்பினார்.. சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள பகுதிகளில் கோடை காலத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அதற்கு மாற்று வழி மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்…