தமிழ்நாடு மாநிலத்தில் தற்கொலையுடன் தொடர்புடைய உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் பின்னணியிலுள்ள முக்கிய காரணங்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை இன்ஃபோசிட்டி (ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232) அறிவித்திருக்கிறது. தற்கொலையால் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களைச்சேர்ந்த குழந்தைகள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி கற்பதற்கு ஆதரவளிக்கும் ஒரு செயல்திட்டமான ரோட்டரி ரெயின்போ செயல்திட்டத்தின்கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரோட்டேரியன் ஶ்ரீதர், தலைவர் (ஆலோசகர் –ரோட்டரி; நிறுவனர் – ரோட்டரி ஃபிரான்டியர் ஹெல்த் எகானமி அண்டு லிட்ரசிபுராஜெக்ட்ஸ் [ROFHELP]) & Ms. எஷிடா, நிறுவனர் (பிளாக் & ஒயிட் என்டர்பிரைஸ்)ஆகியோர், உயிரிழந்த நபர்களின் குழந்தைகளது கல்விக்கான செலவுகளை சமாளிக்க உதவ பண ரீதியிலான ஆதரவாக காசோலைகளை வழங்கியிருக்கின்றனர்.
தேசிய குற்றப்பதிவேடுகள் பீரோவின் (NCRB) தரவின்படி 2021ஆம் ஆண்டில் தகவல்
அறியப்பட்டுள்ள தற்கொலைகளின் எண்ணிக்கை அளவில் இந்நாட்டின் தரவரிசை
பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. ஒரு ஆண்டில் மட்டும்
18,925 தற்கொலைகள் தமிழ்நாட்டில் பதிவாகியிருக்கின்றன. இதே காலஅளவின்போது
22,207 தற்கொலைகள் என்ற எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில்
இருக்கிறது. NCRB தரவின்படி கடந்த ஆண்டு நாடுமுழுவதும் நிகழ்ந்ததாக
பதிவாகியிருக்கும் தற்கொலைகளின் மொத்த எண்ணிக்கையில் 11.5 சதவீதம்
தமிழ்நாட்டின் பங்களிப்பாக இருந்திருக்கிறது.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் ரோட்டேரியன் ஶ்ரீதர்,
தலைவர் (ஆலோசகர் – ரோட்டரி; நிறுவனர் – ரோட்டரி ஃபிரான்டியர் ஹெல்த்
எகானமி அண்டு லிட்ரசி புராஜெக்ட்ஸ் [ROFHELP]), “பல நேர்வுகளில் தாங்கள் நேசித்த
ஒரு நபரை தற்கொலை சார்ந்த இறப்பினால் இழக்கும் குடும்ப உறுப்பினர்கள்,
குறிப்பாக வாழ்க்கை துணையாக உள்ள நபர்களும் தற்கொலை செய்துகொள்ளும்
நிலை தென்படுகிறது. உணர்வு மற்றும் மனநலம் சார்ந்த வழிகாட்டல் இல்லாததும்
மற்றும் அவர்களது வாழ்க்கையில் திடீரென நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்விற்குப்
பிறகு தைரியத்துடன் வாழ்க்கையை நடத்த அவர்களுக்கு உதவ அவசியமாக
இருக்கும் ஆதரவு கிடைக்காததும் இதற்கு காரணமாக இருக்கிறது. அவர்களுக்கு
தேவைப்படும் இந்த ஆதரவை வழங்குவதற்கு, அந்த மோசமான அதிரடி முடிவை
அவர்கள் நேசித்த நபர் எடுப்பதற்கு எது வழிவகுத்தது என்று குடும்பத்தினரிடமிருந்து
துல்லியமாக விசாரித்து அறிவது முக்கியம். பல நேரங்களில் அவர்களது
கண்ணோட்டத்திற்கும் மற்றும் எதார்த்த நிலைக்கும் இடையே மிகப்பெரிய
இடைவெளி இருக்கிறது. இதை தற்கொலையால் உயிரிழந்த நபருக்கு நெருக்கமான
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அறிந்திருப்பார்கள். தற்கொலைக்கான உண்மையான
காரணத்தை கண்டறிவதற்கு குடும்பத்துடனான கலந்துரையாடலும், கனிவான
அக்கறையுடன் கூடிய விசாரணையும் எங்களுக்கு உதவுகிறது. தற்கொலை செய்து
கொண்ட குடும்ப உறுப்பினரின் கால்சுவடுகளை பின்பற்றி அதே காரணத்திற்காக
அக்குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவரும் தற்கொலை முடிவை எடுக்காமல்
இருப்பதை உறுதி செய்ய இது உதவும்,” என்று குறிப்பிட்டார்.
ரெயின்போ (வானவில்) செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, குடும்பத்தில் ஒரு நபர்
தற்கொலை செய்துகொண்டதற்குப் பிறகு (அநேக நேர்வுகளில் குடும்பத்தில் வருவாய்
ஈட்டும் நபர் குழந்தையை படிக்க வைப்பதற்கான நிதி வசதி கண்டிப்பாக
தேவைப்படும் பல குடும்பங்களை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை இன்ஃபோசிட்டி
அடையாளம் கண்டிருக்கிறது. தற்கொலைகளின் மூல காரணத்தை
புரிந்துகொள்வதற்காக இந்த குடும்பங்களின் இல்லங்களுக்கே ரோட்டரி கிளப்-ன்
உறுப்பினர்கள் குழு நேரில் விஜயம் செய்து அவர்களோடு கலந்துரையாடலை
மேற்கொண்டிருக்கிறது. இந்த நேரடி சந்திப்பின் வழியாக அக்குடும்பத்தின்
தற்போதைய சூழ்நிலையையும் குழுவினர் அறிந்து கொள்கின்றனர்.
இக்குடும்பங்களோடு நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது அதிர்ச்சியூட்டும் சில
கண்டறிதல்களையும் இக்குழு தெரிந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் ஒரு
இளவயது குழந்தையின் அம்மா தற்கொலை செய்துகொண்டபோது அதற்கான
உண்மையான காரணம் மனதில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்துவதாக
இருந்தது. வீட்டு வேலை செய்யும் அந்த பெண்மணி அவளது குழந்தையின் கல்வி
செலவிற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை குடிபோதைக்கு அடிமையாகியிருந்த
அப்பெண்ணின் கணவர் எடுத்து மதுவிற்காக செலவுசெய்ததனால் ஏற்பட்ட
வருத்தமும், ஏமாற்றமுமே அப்பெண்ணின் தற்கொலைக்கான காரணமாக இருந்தது.
ரோட்டரி ரெயின்போ செயல்திட்டமானது இவ்வாறு தற்கொலைசெய்துகொண்டதனால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு ஆதரவளித்து வருகிறது.
“நாம் நேசித்த நபரின் இறப்பு என்பது ஏற்றுக்கொள்வதற்கும், அப்பாதிப்பிலிருந்து
மீள்வதற்கும் ஒருபோதும் எளிதானதாக இருப்பதில்லை. அதிகமான ஆதரவை நாம்
வழங்கினாலும் கூட அக்குடும்பத்தின் தனிப்பட்ட இழப்பை ஈடுசெய்ய அது
போதுமானதாக இருப்பதில்லை. ரெயின்போ செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக
அந்நபர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுப்பதற்கு அவரை உந்தி தள்ளிய
உண்மையான காரணங்களை கண்டறிய நாங்கள் முயற்சிக்கிறோம்; அத்துடன், சுய
சார்புள்ளவர்களாக தற்கொலையால் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் மாறும் வரை
அவர்களுக்கு தேவைப்படும் உளவியல் சார்ந்த மற்றும் நிதி சார்ந்த ஆதரவை
வழங்கி நாங்கள் உதவுகிறோம். அத்துடன் எமது கல்வி அறிவு செயல்திட்டத்தின்
ஒரு பகுதியாக தற்கொலை செய்துகொண்ட நபர்களின் பிள்ளைகள் பண வசதி
இல்லாத காரணத்தாலும் மற்றும் உரிய வழிகாட்டல் மற்றும் ஆதரவு இல்லாத
காரணத்தாலும் அவர்களது கல்வியை இடையிலேயே நிறுத்திவிடாமல் தொடர்ந்து
படிப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்,” என்று பிளாக் & ஒயிட் என்டர்பிரைஸ்-ன்
நிறுவனர், Ms. எஷிடா மேலும் விளக்கமளித்தார்.இதற்கும் மேலாக மனநலமும், தற்கொலையினால் ஏற்படும் உயிரிழப்பும்,உண்மையிலேயே சிக்கலானதாகவும், அதிக கவனத்துடனும், புரிதலுடனும்கையாளப்பட வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. ஒரே ஒரு நிகழ்வு அல்லதுசூழ்நிலையின் காரணமாக தற்கொலை சம்பவம் நிகழ்வது அரிதானது; ஒன்றுக்கும்மேற்பட்ட பல காரணிகளின் கலவையான சூழலின் விளைவாகவே தற்கொலைகள்நிகழ்கின்றனர். மிக எளிமையான அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் காரணத்தைகுறிப்பிடுவதற்குப் பதிலாக தற்கொலைக்கான அடிப்படை காரணத்தை
கண்டறிவதற்கு ஆழமான ஆராய்ச்சியும் மற்றும் ஒளிவுமறைவற்ற நேர்மையான
முயற்சியும் இவ்விஷயத்தில் தேவைப்படுகிறது.ரெயின்போ செயல்திட்டத்தின்கீழ் ஆலோசனை வழங்கும் அமர்வுகளின் வழியாகதற்கொலையால் உயிரிழந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்துவழிகாட்டப்படுகின்றன. பாதுகாப்பான எதிர்காலத்தை பெறுவதற்கு உயிரிழந்த நபரின்வாழ்க்கை துணைக்கு வேலைவாய்ப்புகளும் கண்டறியப்பட்டு வழங்கப்படுகின்றன.