டிவி, போன் உட்பட பல சேவைகள் ! ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் ..!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன.இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆககுறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ரூட்டர், சிங்கிள் பேண்டில் மிக அதிகமான இண்டர்நெட் வேகத்தை தரும். அதாவது 50 Mbps வேகத்தில் இருந்து 100 Mbps வேகம் வரை இண்டர்நெட் வேகம் பெறக்கூடியது இந்த ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ஆகும். 50Mbps வேகத்தில் செயல்படும் இணைய சேவையை பெற ரூ. 600 கட்டணமாகும் என்றும் 100Mbps வேகத்தில் இயங்கும் இணைய சேவையைப் பெற ரூ. 1000 கட்டணமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் வருடாந்திர ஜியோ மாநாட்டில் அதிகாரப்பூர்வ கட்டண அறிவிப்புகள் வெளியாகும்.

இந்த தகவலை பிரெஷிட் தியோருக்கார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இண்டர்நெட் மட்டுமின்றி அழைப்புகளுக்கும் இந்த டிவைஸை பயன்படுத்தி கொள்ளலாம். அவருடைய டுவிட்டின்படி இந்த ஜியோ ஜிகாஃபைபர் டிவைஸ் 2.4GHz சப்போர்ட் செய்யும் என்றும் வைஃபை மற்றும் 5GHz பிராண்ட் வைஃபை பயன்படுத்தலாம் என்றும், 10/100 ஈதர்நெட் போர்ட் கொண்ட இந்த டிவைஸ் 9 x 5 இன்ச் அளவினை கொண்டது என்றும் இது கருப்பு நிறத்தில் இருக்கும் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த டிவைஸில் மூன்று RJ45 போர்ட்டுக்க்ள், ஒரு மைக்ரோ யூஎஸ்பி 2.0 மற்றும் ஒரு RJ11 போர்ட் ஆகியவைகளும் உள்ளன.

இந்தியாவின் ஒருசில நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகாஃபைபர் சோதனை முயற்சியில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்தியாவில் ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து தொடங்கப்பட்டுள்ள இந்த ஜியோ ஜிகாஃபைபருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.