‘டிராய்’ உத்தரவை மீறும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் !

கேபிள், ‘டிவி’யில், குறிப்பிட்ட சில கட்டண சேனல்களை உள்ளடக்கி, புதிய மாத கட்டணத்தை வசூலிக்க, தனியார் கேபிள், ‘டிவி’ நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக, ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.புகார்கள்விரும்பிய சேனல்களுக்கு மட்டும், கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி, பிப்., 1 முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு சேனலும், தங்கள் கட்டணத்தை விளம்பரப்படுத்தி வருகின்றன.ஆனால், தனியார் கேபிள், ‘டிவி’ நிறுவனங்கள், அவர்கள் விரும்பும் சில சேனல்களை, ஒரு தொகுப்பாக நிர்ணயித்து, மக்களிடம் திணிக்க திட்டமிட்டுள்ளனர் என, புகார்கள் வருகின்றன.

இது குறித்து, கேபிள், ‘டிவி’ ஆப்பரேட்டர்கள் கூறியதாவது:மக்கள், தாங்கள் விரும்பும் சேனல்களை பார்க்க வேண்டும் என்பதற்காக, புதிய கட்டண முறையை, ‘டிராய்’ அறிமுகப்படுத்தியது.இதன்படி, பலர் தாங்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கின்றனர்.இதற்கு, மக்களிடம் அதிகம் வரவேற்பு கிடைத்தாலும், கட்டணம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி, சில குறிப்பிட்ட சேனல்களை மட்டும், ஒரு தொகுப்பாக நிர்ணயிக்க, தனியார் கேபிள், ‘டிவி’ நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த தொகுப்பு சேனல்களை மட்டும், மக்களிடம் அதிகம் எடுத்து செல்ல, கேபிள், ‘டிவி’ நிறுவனங்கள் எங்களை வலியுறுத்துகின்றன. இது, டிராயின் உத்தரவை மீறும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.