டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேம்படுத்த புதிய குழு !

நாட்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேம்படுத்த, நந்தன் நிலேகனி தலைமையில் 5 நபர்கள் அடங்கிய குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

நாட்டில் தற்போதுள்ள டிஜிட்டல் பணவரித்தனை முறையை ஆய்வு செய்து, அதிலுள்ள குறைபாடுகளை களைந்து பாதுகாப்பாக நடைமுறைப்படுத்த இந்த குழு ஆலோசனை அளிக்கும். இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீலேகனி இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆதார் திட்டத்தை செயல்படுத்திய தனி நபர் அடையாள ஆணையத்தின் தலைவராக இருந்தவர்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் எச்.ஆர்.கான், விஜயா வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குனர் கிஷோர் சன்சி உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற பின் 90 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது