ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதிப்பு

ஜான்சன் அண்ட் ஜான்சன் வாடிக்கையாளர்களிடமிருந்து தவறாக பணம் வசூலித்ததால் ரூ .230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு உற்பத்தியாளரான ஜான்சன் அண்ட் ஜான்சன், வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி (GST) விலக்கின் பயனை வழங்காததற்காக தேசிய மிகை லாப தடுப்பு (The National Anti-profiteering Authority) அபராதம் விதித்துள்ளது.

தேசிய மிகை லாப தடுப்பு ஆணையத்தின் தலைவர் பி.என்.ஷர்மன் தனது உத்தரவில், 15 நவம்பர் 2017 முதல் டிசம்பர் 2018 வரை வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் ஜிஎஸ்டி (GST) விகிதத்தை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அரசாங்கம் குறைத்தது. ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை.

மேலும் மூன்று மாதங்களுக்குள் நிறுவனம் 230 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அபராதத்தை நிறுவனம் செலுத்தாவிட்டால், இந்த பணம் ஜிஎஸ்டி அதிகாரத்தால் மீட்கப்படும் எனவும், ஜி.எஸ்.டி சட்டம் 171(3A) பிரிவின்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் தங்கள் குழந்தை தோல் புற்றுநோயை ஏற்படுத்துவதாக நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த பெண்ணின் கூற்று உண்மை என்று கண்டறியப்பட்டு மற்றும் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டியிருந்தது. இதேபோல், கடந்த ஆண்டு நிறுவனம் தயாரித்த ஒரு பொருளின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக நெஸ்லே நிறுவனத்துக்கு ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts:

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது.!

“வெற்றிமாறன் சாரின் 'விடுதலை' படத்திற்குப் பிறகு, ’ஜமா’ படத்தில் இன்னொரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” - நட...

’ஒன் மேன்’ --திரைப்பட விமர்சனம்!

மைய்யல்-- விமர்சனம்!

MAA தலைவர் நடிகர் விஷ்ணு மஞ்சு தனது மகள் அய்ரா வித்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். !

’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

லாரி ஓட்டுவது எளிதல்ல? 'கைதி' பற்றி கார்த்தி !

'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு!