சென்னையில் முதல் முறையாக காவேரி மருத்துவமனை தனது முதல் ஞாபக சிகிச்சை மையத்தை துவங்கியுள்ளது . பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் சிகிச்சையகத்தை துவங்கி வைத்தார் .
மனசோர்வினால் ஏற்படும் டிமென்ஷியா குறித்து பரிசோதித்தல், கண்டறிதல் மற்றும் ஞாபகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கும், அவர்களின் பொறுப்பாளர்களுக்கும் தொடர் ஆலோசனை மற்றும் தேவையான தகவல்களை வழங்குதல், ஆகிய சேவைகளை இந்த ஞாபக சிகிச்சை மையமானது வழங்கும் முந்தைய நிலையிலேயே கண்டறியப்பட்ட டிமென்ஷியா உட்பட, ஞாபகம் தொடர்பான இடர்பாடுகள் உள்ள நபர்கள், எந்த வயது வரம்பை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த ஞாபக சிகிச்சை மையத்தில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் .
காவேரி மருத்துவமனையின் மூத்த நரம்பியல் வல்லுனரும் & நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் ப்ரித்திகா சாரி, சிகிச்சையகத்தின் சேவைகள் குறித்து பேசுகையில் கூறியதாவது , ” இந்த சிகிச்சை மையத்தில் அளிக்கப்படும் ஞாபக பிரச்சனைகள் தொடர்பான சிகிச்சைகளில் , ஒருவரின் ஞாபகசக்தியானது ஒரு முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு , ஒருவேளை டிமென்ஷியா இருப்பது உறுதி செய்யப்பட்டால் , அதற்கான உரிய சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்படும் . சிகிச்சை துவங்கப்படும் போதே , அந்த நபர்களுக்கு கண்டறியப்பட்ட நிலை குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட்டு , பயனுள்ள ஆலோசனைகள் மற்றும் மேற்படி சிகிச்சைகள் அளிக்கப்படும் . இதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஞாபகம் குறித்த பிரச்சனைகள் படிப்படியாக குறைக்கப்படும் . ” காவேரி மருத்துவமனையை சார்ந்த நரம்பியல் வல்லுனர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று பலவிதமான டிமென்ஷியா, மன அழுத்தம், ஞாபக பிரச்சனைகள், மற்றும் மனரீதியான இடையூறுகள் ஆகியவை குறித்து கலந்தாலோசித்து, பேசினர் . தினசரி வேலைகளை செய்வதிலும், ஞாபகம் வைத்துக்கொள்வதிலும் சிரமம் உள்ள நபர்கள், எப்படி அதன் பொதுவான அறிகுறிகளை தெரிந்து கொள்வது, அதற்கான சேவைகளையும், உதவியையும் எப்படிப்பெறுவது என்பது குறித்து மருத்துவர்கள் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, நீயா நானா புகழ் கோபிநாத் சந்திரன் பேசுகையில் கூறியதாவது, ” சென்னையில் முதல் முறையாக இந்த ஞாபக பிரச்சனைகளுக்கான சிகிச்சையகத்தை துவங்கிய காவேரி மருத்துவமனைக்கு நான் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். டிமென்ஷியா மற்றும் அல்ஸைமர்ஸ் என்னும் முதுமறதியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இங்கு அளிக்கப்படும் சேவைகள் ஒரு வரமாக அமைந்து பயன் தரும் . இந்த சிகிச்சைமையத்தை துவங்கியதன் மூலமாக, ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதில் அவர்கள் தேவையான ஆதரவும், அரவணைப்பும் கிடைக்கும் என்று நம்புகிறோம் ” . இந்த ஞாபக சிகிச்சை மையமானது மதியம் 3 மணி முதல் 5 மணி வரை , உளவியல் நிபுணர் திரு . டீனு அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயல்படும் . கூடுதலாக , டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு , பல்வேறு செயல்பாடுகள் மற்றும் ஞாபகம் குறித்த சோதனைகளை உள்ளடக்கிய உதவி வழங்கும் சந்திப்புக் கூட்டமானது , ஒவ்வொரு மாதமும் இரண்டாம் புதன்கிழமை , மதியம் 2 மணி முதல் 5 மணி வரை , காவேரி மருத்துவமனையில் நடைபெறும்