சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம் !

வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க இந்த குடும்பம் முதல் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறது. இத்திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்

கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

 

Related posts:

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு
கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது.!
சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் - எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா?
நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது!
57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன...
‘புஷ்பா 2’ படத்தில் இருந்து 'தி கப்புள் சாங்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.
வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது!