கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் ? அபிக்யா ஆனந்த் கணிப்பு.!

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான்.இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன், அபிக்யா ஆனந்த். சிறு வயதிலேயே ஜோதிடத்தில், வானவியல் சாஸ்திரத்தில், நிபுணத்துவம் பெற்றான். தன் ஜோதிட அறிவுக்காக, பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளான்.

கடந்த, 2019 ஆகஸ்ட் மாதம், ஒரு வீடியோவை வெளியிட்டான். அதில், 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை, உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை, கணித்து கூறினான்.’மிகவும் அரிதாக, செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை, சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

இவை இணைவதால், அதிகமான கதிர்வீச்சு, பூமியை தாக்கும். அதே நேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும், சக்தி வாய்ந்ததாகும். ராகு, உலகில் நோய்களை பரப்பும்’ என, ஆனந்த் கணித்து கூறினான்.அதேபோல், தற்போது உலகை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மனிதர்களுக்கும், வைரசுக்கும் இடையிலான போராக, இது பார்க்கப்படுகிறது.இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்நோயின் தாக்குதல் எப்போது குறையும் என, மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,கொரோனா வேகம் எப்போது குறையும் என்பதையும்,ஆனந்த் கணித்து கூறி உள்ளான்.
ஏப்., 1 வரை, கொரோனா தாக்கம் அதிகம் இருக்கும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், பாதிப்பு அதிகமாக இருக்கும்.ஆந்திரா,மேற்கு வங்கம்,ஒடிசா போன்ற மாநிலங்களிலும்,பாதிப்பு அதிகமாக இருக்கும்.ஏப்ரலுக்கு பின், படிப்படியாக குறைந்து, மே, 29ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும். பொருளாதார வீழ்ச்சியும், நவம்பரில் முடிவுக்கு வரும் என, கணித்து கூறி உள்ளான்.கொரோனா நோய் பரவாமல் இருக்க, தண்ணீருடன், மஞ்சள், எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும்.நன்கு கொதித்து ஆவி வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, தலை மீது துண்டை போர்த்தி, அந்த ஆவியை நுகர வேண்டும். அது, மூக்கு துவாரத்தின் வழியே சென்று, கிருமிகளை அழிக்கும்; புத்துணர்ச்சி தரும்.சூரிய ஒளியில், அதிக நேரம் நிற்கலாம் என்றும், ஆலோசனை வழங்கியுள்ளான். இச்சிறுவனின் வீடியோக்கள், தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.