கொரோனா விவகாரத்தில் சீனா – அமெரிக்கா இடையே முற்றுகிறது மோதல் ?

கொரோனா வைரஸ் தொற்று, சீனா – அமெரிக்கா இடையேயான மோதலை, முற்றச் செய்துள்ளது. ‘கடந்த ஆண்டு அக்.,ல் வூஹானில் நடந்த சர்வதேச ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த, அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், சீனாவில் கொரோனா வைரசை பரப்பினர்’ என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்தார். சீனாவின் இந்தக் குற்றச்சாடால் உலக அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா வைரசை, ‘சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டார். அதன்பின், அமெரிக்காவில் பணியாற்றி வந்த, சீனப் பத்திரிகையாளர்கள், 60 பேரை அங்கிருந்து வெளியேற்றியது ட்ரம்ப் அரசு. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கப் பத்திரிகைகளான, ‘நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த, சீனாவில் பணியாற்றும், 13 செய்தியாளர்கள், சீனாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘நியூயார்க் டைம்ஸ்’ நிருபர் ஏமி கின், தன் டுவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா வைரஸ் பாதித்த வூஹான் நகர் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து என் வாயிலாக உலகத்துடன் பேச விரும்பினர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு சீன அரசுதான் பொறுப்பு எனக் குற்றம் சாட்டினர். பல்வேறு மோசமான நினைவுகளுடன் சீனாவிலிருந்து நான் வெளியேறுகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, பல்வேறு தகவல்களை சீன அரசு மறைத்தது. அதை வெளியிட்ட சீனா பத்திரிகையாளர்கள் மாயமாக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் உண்மையை வெளியிட்டதால்தான், சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts:

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் போராட்டம் ?பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சாஹி நியமனம் !

சென்னையில் கொரிய நாட்டு பாரம்பரிய இசை விழா !

டிவி, போன் உட்பட பல சேவைகள் ! ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் ..!

பால் விலையை அடுத்து தயிர், நெய் விலையையும் உயர்த்தியது ஆவின்...!

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ?

குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...