‘கொரோனா’ பரிசோதனை இலவசம்’ ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !!

‘நாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வந்தன. தொற்று அதிகரிக்க துவங்கியதை அடுத்து, தனியார் பரிசோதனை கூடங்களும் பரிசோதனை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு, 4,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கறிஞர் சஷாங் தியோ சுதி என்பவர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்:கொரோனா பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், தனியார் பரிசோதனை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு, சாமானிய மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.ஆனால், தனியார் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படும், 4,500 ரூபாய் கட்டணத்தை, அனைவராலும் செலுத்த முடியாத நிலை உள்ளது. முழு அடைப்பால், கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள சாமானிய மக்களுக்கு, இத்தொகை கடும் சுமையாக உள்ளது.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அசோக் பூஷண், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம், நேற்று விசாரித்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: கொரோனா பரிசோதனைக்கு, தனியார் பரிசோதனை மையங்கள், அதிக தொகை வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. அதற்கு செலவு செய்யும் தொகையை, அரசிடம் இருந்து, மக்கள் திரும்ப பெறக் கூடிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும், கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், விசாரித்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், போர் வீரர்களைப் போன்றவர்கள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். மேலும், சேவை துறையை சேர்ந்த பலர், வீட்டில் இருந்து பணியாற்றுகின்றனர். அவர்களின் உடல் மற்றும் மனநலன் குறித்தும், அரசு கவனம் கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related posts:

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் துணை மின் நிலையம் ! அமைச்சர் தங்கமணி உறுதி !!
மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் நடிகர் ராதாரவி!
கொரோனா என் உடலைத் தின்கிறது ? கண்ணீரை வரவழைக்கும் ஃபிரான்ஸ் தமிழரின் பதிவு ?
ஊடரங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி உறுதி
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க தென்னகரயில்வே குழுக்கள் !
தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிதியுதவி!
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா நிதியுதவி !
வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் !