கொரனாவில் அரசியல் வேண்டாம் ? எதிர்கட்சிகளுக்கு பத்திரிக்கையாளர் வாராகி அறிக்கை ?

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்து வருகிறது . 8.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பாதிப்பும், உயிர்பலியும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் இந்நிலையில் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் தப்லிக் ஜமாத் சார்பில் மத வழிபாடு மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மதகுருக்கள் . அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநாட்டில் பங்கேற்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிலையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படும் பணிகள் நடைபெறுகின்றன. மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பியவர்களில் தெலுங்கானாவில் 6 பேர், காஷ்மீரில் ஒருவர் என 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 31நிலவரப்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ஆக இருந்த. நிலையில்தான், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது அந் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்து இருக்கிறார்.தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்ற அவரது அந்த அறிவிப்பு, ஏற்கெனவே கொரோனா பீதியின் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள பொதுமக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..! ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கைக்கு காரணம் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் என்ற செய்தி, பொதுமக்களுக்கு இடியாய் இறங்கியுள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,500 பேரில், 1,130 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களில் சிலர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்
மற்றவர்கள் தாமாக முன் வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இப்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரேநாளில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ள.இந்த நிலையில், இந்த மாநாடு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து சமூக வலைதளங்களில் பலரால் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. கொரானா என்னும் கொடூரம் உலகத்தையே தாக்கி வருகிறது அதற்கு நாடு இனம் மதம் ஜாதி வித்தியாசம் எல்லாம் கிடையாது இந்த உலகளாவிய ஆபத்தை உலகளாவிய அளவில் எதிர்த்து நிற்க வேண்டும் ஆனால் எதிர்க்கட்சிகள் நோயைக்கும் அரசியல் சாயம் பூச பார்க்கிறார்கள் டெல்லி மாநாட்டில் பங்குகொண்ட சிலருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் பங்குகொண்ட மற்றவர்களையும் கண்காணிப்புக்குள் கொண்டு வருவது அவசியம் ஆபத்தை உணர்ந்து அவர்களே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதும் தான்நியாயம் இதைத்தான் அரசும் கடந்த 10 நாட்களாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பொதுமக்களும் வேண்டுகிறார்கள் ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்திலும் அரசியல் ஆதாயங்களை தேட நினைப்பது வேதனை அளிக்கிறது குடியுரிமைச் சட்ட விஷயத்தில் இஸ்லாமிய மக்களை திசை திருப்பி அதை அரசியலாக மாற்றிக்கொண்ட எதிர்க்கட்சிகள் அதேபோன்ற ஒரு விஷயத்தையும் இந்த கொரனா நோய் தேற்றிலும் பின்பற்றத் தொடங்கியுள்ளது வேதனை அளிக்கிறது ஏற்கனவே அரசுக்கு எதிரான மனநிலையை இஸ்லாமிய மக்கள் மனங்களில் விதைத்து வரும் எதிர்க்கட்சிகள் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி மத்திய மாநில அரசுகள் அறிவித்த அறிவிப்புகளை ஏதோ இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஒரு திட்டம் போல கட்டமைக்க எதிர்கட்சிகள் முயல்கின்றன இது ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பையும் தங்கள் அரசியல் நலனுக்காக கேள்விக்குறியாகும் எதிர்க்கட்சிகளின் இந்த அரசியல் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் . இஸ்லாமிய நலனில் அக்கறை உள்ளது போல தங்களைக் காட்டிக் கொள்ளும் ஸ்டாலின் திருமாவளவன் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விஷயத்தில் கள்ள மௌனம் சாதிக்காமல் உடனடியாக மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற அறிக்கையை வெளியிட வேண்டும் தேவைப்படும் இடங்களில் பேசாமல் இருப்பதை தனது அரசியல் சாணக்கியத்தனம் என நம்பிக்கொண்டிருக்கும் திரு ஸ்டாலின் தனது மௌனத்தை கலைத்து இஸ்லாமிய மக்களை தனது அரசியல் ஆதாயத்திற்காக பலி கொடுக்காமல் காப்பாற்ற வேண்டும் என தி.மு.க வையும் ,இஸ்லாமிய அமைப்புகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Related posts:

தாமிரபரணி தண்ணீர் 20 ஆண்டுகளில் நஞ்சாக மாறும் அபாயம் ? நீரியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!
பி.எஃப்-இல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும்!
விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், 'கொரோனா' முகாம்களாக மாற்றம்?
இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மத்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!
விவாகரத்துகள் குறைய மிக தேவையான ஒன்று திருமணத்துக்கு முந்தைய கவுன்செலிங் !
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பயோ டீகிரேடபிள் பிளாஸ்டிக் மக்காது- ஐநா எச்சரிக்கை
நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ - கவிதைத் தொகுதி !
பொருளாதார மந்த நிலை காரணமாக, தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் ?