‘கூகுள்’ தான் உலகின் நெ.1 தேடுபொறி.! அடுத்த இடத்தை பிடித்திருப்பது, ‘ஜிப்பி’ !!

‘கூகுள்’ தான் உலகின் நெ.1 தேடுபொறி. அதற்கு அடுத்த இடத்தை இப்போது பிடித்திருப்பது, ‘ஜிப்பி’ (giphy.com).தன் நண்பர்களை குஷிப்படுத்துவதற்காக இணையத்தில், ‘ஜிப்’ கோப்புகளாக கிடைக்கும் சிலவினாடி வீடியோ துணுக்குகளை தேடும் மென்பொருளை உருவாக்கினார் அலெக்ஸ் சுங்.பிறகு, 2012ல் அதை முழுநேர தேடுபொறி தளமாக தன் நண்பர் ஒருவரை இணை நிறுவனராக ஆக்கி துவக்கினார் அலெக்ஸ்.

இணைய உலகில் பல மொழிகள், கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் புழங்குகின்றனர். அவர்கள் தங்கள் அன்பு, கருணை, கோபம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த, ஜிப் படத்துணுக்குகளை பயன்படுத்த ஆரம்பித்திருந்த நேரம் அது. அந்த படத்துணுக்குகளை தலைப்பு வாரியாக, உணர்வு வாரியாக பிரித்துத் தரும் பணியை ஜிப் சரியாகச் செய்தது.இந்த தேடு பொறியை, ‘டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர்’ போன்ற சேவைகள் ஆதரிக்க ஆரம்பித்தன. நீங்களும் இந்த தளங்களில் ஜிப் படத்துணுக்குகளை தேடியிருந்தால், அதைத் தேடித் தந்தது ஜிப்பி மென்பொருளாகத்தான் இருக்கும்.இப்படி மறைமுகமாகவும், நேரடியாகவும் பலர் ஜிப்பியின் சேவையை பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால், ஜிப்பி, உலகின் இரண்டாவது பெரிய தேடுபொறி என்ற தகுதியை பெற்றுவிட்டது.