SCD எனப்படும் திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உகந்த சிகிச்சை வழங்குவதில் காவேரி மருத்துவமனை முக்கியப் பங்கு வகிக்கிறது.நடிகர் பத்மஸ்ரீ விவேக் முன்னிலையில் நடைபெற்ற திடீர் மாரடைப்புத் தடுப்பு நிகழ்ச்சியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 10 SCD சிகிச்சை பெற்று பயனுற்றவர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ நடிகர் விவேக் பேசியபோது கூறியதாவது: “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது. திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்களிலிருந்து காக்க காவேரி மருத்துவமனை மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளை என்னால் காண முடிகிறது.விழிப்புணர்வு இல்லாததும், வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள தயங்குவதுமே, இந்தியாவில் திடீர் மாரடைப்பினால் மரணங்கள் (SCD) ஏற்பட முக்கியக் காரணங்களாகும். திடீரென மாரடைப்பினால் ஏற்படும் மரணம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம் தேவை. பொதுமக்கள் திடீர் மாரடைப்பிலிருந்து காக்கும் சிறப்பு SCD மருத்துவமனைகளை அணுகி, இதயம் தொடர்பான பிரச்சனைகளை முன்னதாகவே கண்டறிந்து, திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து(SCD) தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான வளர்ச்சி தொடர எனது வாழ்த்துக்கள்.”
காவேரி மருத்துவமனையின் திடீர் மாரடைப்பு சிகிச்சைப்பிரிவின்(SCD) திட்டத்தலைவரும், மூத்த இதயநோய் சிகிச்சை ஆலோசகருமான டாக்டர் A.B. கோபாலமுருகன் கூறியதாவது, “மரணம் என்ற ஒன்றை அதன் அறிகுறிகளை வைத்து வரும் முன் காக்க மட்டுமே முடியும்.திடீர் மாரடைப்பினால் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கக்கூடிய திறன் வாய்ந்த வல்லுனர் குழுவினால் உடனடியாக சிகிச்சையளித்தால் மட்டுமே உயிரைக் காக்கமுடியும். திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணம் என்பது ஹார்ட் அட்டாக் எனப்படும் வழக்கமான “நெஞ்சு வலி” அல்ல, இது இதயத்தில் வழக்கத்திற்கு மாறாக ஏற்படக்கூடிய ஒரு மின்சார பாதிப்பாகும். இருந்தபோதும் இது போன்ற மரணங்களை “நெஞ்சு வலியால்” ஏற்பட்ட மரணம் என்று பொதுவாக சொல்லிவிடுவார்கள், ஆனால் அவை இதயக்குழாயில் உண்டாகும் அடைப்பினால் ஏற்படும் மரணமாகும். ஆனால் எப்போதும் அப்படி ஏற்படுவதில்லை. இதயத்தில் மிகவும் மெதுவாக நிகழும் மின்சார உந்துதலில் துவங்கி , வேகமாக நிகழும் மின்சார உந்துதலாகவோ, அல்லது, இதயத்தின் வயரிங் அமைப்பில் ஏற்படக்கூடிய மின்சார பிரச்சனைகளின் காரணமாகவோ இதயத்தில் மின்சார பாதிப்புகள் ஏற்படலாம்.இதயத்தில் பலவிதமான மின்சார பாதிப்புகள் ஏற்படலாம். இதயநோய் மருத்துவத்தின்மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீனமான உட்பிரிவான “கார்டியாக் எலெக்ட்ரோபிஸியாலஜி” என்பது இதயத்தின் மின்சார போக்கு பற்றிய சப்-ஸ்பெஷாலிட்டி அல்லது சூப்பர்-ஸ்பெஷாலிட்டி பிரிவாகும். திடீர் மாரடைப்பினால் மரணம் (SCD) ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.ICD எனப்படும் (இம்பிலேட்டபில் கார்டியோ வெர்ட்டர் டிஃபிரிலேட்டர்) கருவியைப் பொருத்துவதன் மூலம் SCD-ஐ ஏற்படுத்தும் பல காரணிகளை முன்னதாகவே தவிர்க்க முடியும்.குறிப்பிட்ட பகுதியை மயக்கமடைய செய்து, இடது புற மார்புப் பகுதியின் தோலுக்கு கீழ் பொருத்தப்பட்ட இதயக் கருவிக்கு ஒரு வயர் (ஈயம்) செல்லும் விதத்தில் இந்தக் கருவி பொருத்தப்படும். இதனை ஒரு சான்றிதழ் பெற்ற இதயக் கருவி பொருத்தும் சிறப்பு மருத்துவர் (CCD) அல்லது ஒரு இதயசிகிச்சை அளிக்கும் எலக்ட்ரோபிஸியாலஜிஸ்ட் இந்த கருவியை பொருத்தும் பணியை மேற்கொள்வார்.”
இதனைத் தொடர்ந்து பேசிய காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது, “திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து (SCD) காக்கும் பிரத்தியேக மருத்துவ மையங்கள் இந்தியாவில் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளன. அவற்றுள் காவேரி மருத்துவமனையும் ஒன்றாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உடற்பயிற்சி, உணவில் சோடியம் அளவினைக் குறைத்தல், மன அழுத்தத்தை சரியாக கையாளுதல், உடல் எடையை கட்டுபடுத்துதல் போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தலாம். காவேரி மருத்துவமனையில், இதயநோய் சிகிச்சை வல்லுனர்கள், எலக்ட்ரோபிஸியாலஜிஸ்ட்ஸ் மற்றும் இதர சிறப்பு மருத்துவர்கள் நேரடியாக,ஓவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சையளித்து அவர்களை,சாத்தியமான நல்லதொரு வாழ்க்கையை வாழவைக்க உதவுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திற்கு சிகிச்சையளிக்கும் வசதிகள் இல்லை.அந்நாட்களில், மருத்துவ உதவி செய்து காக்கும் நிலையைக் கடந்தே இது போன்ற பாதிப்பு கண்டறியப்படும். அதனால் சிகிச்சை அளிக்க முடியாமல் போகும். தமிழகத்தில் இந்த திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து (SCD) காக்கும் பிரத்தியேக சிகிச்சைப் பிரிவு காவேரி மருத்துவமனையில் மட்டுமே, டாக்டர் A.B. கோபாலமுருகன் அவர்கள் தலைமையில் செயல்படுகிறது. சிகிச்சையின் அவசியம் உள்ளவர்களை எமது அணி நாடி, அவர்களை இங்கு அழைத்து வந்து,நவீன தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி, SCD ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள நபர்களைக் கண்டறிந்து, அதற்கான தக்க சிகிச்சை அளித்து, தற்போது நாம் இந்த SCD பாதிப்பிலிருந்து பலரை வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளோம்.”
இந்நிகழ்ச்சியிலிருந்து அறியப்படும் தகவல்கள் பின்வருமாறு:
1.திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணம் (SCD) எனப்படுவது இதய நோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம், பாதிக்கப்பட்ட பின் சிகிச்சையளிக்க போதிய நேரம் இல்லாத காரணத்தினால், முன்னதாக சிகிச்சை அளிப்பதன் மூலமாக காத்துக்கொள்ள மட்டுமே முடியும்.
2.திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணம் (SCD) என்பது ஒரு“நெஞ்சு வலி” என்னும்“மாரடைப்பு” இல்லை. ஆனால் திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணத்திற்கு (SCD) “நெஞ்சு வலி”யும் ஒரு காரணமாகும்.
3.திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணம் (SCD) அல்லது எந்தவொரு இதயக் கோளாறுக்கும் உள்ள பொதுவான செயல்பாடு,இதயத்தில் ஏற்படும் ஒரு வித மின்சார பிரச்சனை தான். இது வழக்கமான ஒரு நெஞ்சுவலியோ மாரடைப்போ கிடையாது.
4.‘இதய எலெக்ட்ரிஷியன்’ எனப்படும்‘கார்டியாக் எலக்ட்ரோ பிஸியாலஜிஸ்ட்’ தான்இதயத்தில் ஏற்படும் மின்சார கோளாறுகளை சிறப்பாக கையாளக்கூடிய நிபுணர் ஆவார்.
5.நவீனசிகிச்சை முறைகளை பயன்படுத்தி திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணத்தினை (SCD) தவிர்க்கலாம். இதனால் பாதிக்கப்படும் ஆபத்திலிருக்கும் நோயாளிகளைக் கண்டறிய அதற்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளன, அதற்காக பிரத்தியேக SCD பாதுகாப்பு நிகழ்ச்சிகள் அங்கு நடத்தப்படுகின்றன.
6.திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணம்(SCD) குழந்தைகளையும் பாதிக்கலாம், அவர்களை காப்பாற்ற “திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணத்தினை (SCD) தவிர்க்கும் திட்டங்கள்” மற்றும்“குழந்தைகளுக்கான சிறப்பு எலக்ட்ரோ பிஸியாலஜி” பிரிவுகள் பிரத்தியேகமாக செயல்படுகின்றன.
7.குடும்பத்தில் யாராவது திடீரென காரணம் அறியாமல் இறந்திருந்தால், அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் “SCD தடுப்பு திட்டம்” மூலம் பரிசோதிக்கப்பட்டு SCDயிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.
8.இதயபடபடப்புமற்றும் சுயநினைவை இழத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக ஒரு கார்டியாக் எலக்ட்ரோபிஸியாலஜிஸ்ட்டால் பரிசோதிக்கப்பட வேண்டும்.
9.இதற்கு முன்பு இதய பாதிப்பினால் நெஞ்சுவலி ஏற்பட்டவர்கள், இதய செயல்பாடுகள் மந்தமாக உள்ளதாகவோ அல்லது இதயக் கோளாறு உள்ளவர்கள்SCD-யிலிருந்துதங்களை பாதுகாக்கவும், இதய செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ளவும்அவசியமாக ஒரு கார்டியாக் கருவி வல்லுனரால் பரிசோதனை செய்யப்படவேண்டும்.