கண் பார்வை பற்றி தெரியாத உண்மைகள்!

டெக்னாலஜி வளர்ந்த நிலையில் மொபைல் போன்களில் பலவிதமான கேமராக்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. எவ்வளவு மெகா பிக்சல் கொண்ட கேமராக்கள் வந்தாலும் மனித கண்களுக்கு சமமான விஷுவல் அது கொடுக்காது

மனிதக் கண் ஆனது வெறும் ஒரு இன்ச் அளவு கொண்டது.மேலும் நமது கண்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேலான நிறங்களைப் பிரித்தறியலாம். நமது கண்களின் மொத்த பார்வைத்திறனை மெகா பிக்சல்(MP) அளவிற்கு கணக்கெடுத்தால் 576 மெகாபிக்சல் ஆகும்.
இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகிப்பதால் மெலடோனின் என்னும் திரவம் கண்களில் சுரப்பது நிறுத்தப்படும் இதனால் தூக்கமின்மை கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது மேலும் ஸ்லீப்பிங் டிப்ரஷன் எனும் நோய்க்கு ஆளாகலாம்.
நமது கண்களை ஒரு நிமிடத்திற்கு ஏறத்தாள சுமார் 17 முறை சிமிட்டுகிறோம்
நாம் பொதுவாக நமது கண்களை ஏன் சிமிட்டுகிறோம் என்று நினைத்துப் பார்த்ததுண்டா? கண்களில் உள்ள அழுக்குகள் தூசிகள் வெளியேற்றுவதற்காகவே கண் தன்னிச்சையாக சிமிட்ட படுகிறது.
பிறந்த குழந்தைக்கு முதல் ஐந்து வாரங்களுக்கு கண்ணீர் சுரப்பது இல்லை. அவர்கள் அழுதாலும் கண்களிலிருந்து கண்ணீர் வராது.மேலும் பிறக்கும் பல குழந்தைகள் நிற குறைபாட்டாலும் பாதிக்கப்படுகின்றனர்

நீங்கள் வானத்தை நோக்கி பார்த்தாலும் கண்களை கசக்கி விட்டு பார்த்தால் ஒரு வைரஸ் போன்ற ஒன்று வானத்தில் ஓடுவது போன்று காட்சியளிக்கும் இதற்குப் பெயர் Floaters. இது உருவாவதற்கு முக்கிய காரணம் கண்களில் உள்ள தேவையற்ற புரோட்டின் ஆகும்

கண்ணைப் பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை கண்களின் வளர்ச்சி அதே நிலையில் இருக்கும் கண்கள் அளவு எந்த நிலையிலும் மாறாது

பெரும்பாலானவர்கள் இரவு நேரங்களில் ஸ்மார்ட் போன் யூஸ் செய்யும்போது ஒரு கண்களை மூடிக்கொண்டு இன்னொரு கண்ணால் மட்டுமே பார்ப்பார்கள்.இப்படிப் பார்ப்பதன் மூலம் பெரும்பாலானவர்களுக்கு குருவி தன்மையும் பார்வை குறைபாடு தன்மையும் ஏற்படுகிறது. முடிந்தவரை ஒரு கண் சோர்வு வரும்போது மொபைல் போன்களை ஆப் செய்து வைப்பது நல்லது.

ஒரு மனிதனின் அடையாளத்தை கைரேகை கொண்டு கண்டு பிடிப்பது போல கண்களிலும் ச பல ரேகைகள் உண்டு. கைவிரலில் 40ரேகை உள்ளது எனில் கண்களில் 256 ரேகைகள் உள்ளது.

நமது காதலியையோ நமது மனதிற்கு பிடித்தவர்களை முன்னாள் காதலியை பார்க்கும் போது நம்மை அறியாமலேயே நமது கண்ணின் கருவிழி ஆனது சற்றே பெரிதாகும்.

இதுவே மனிதனின் கண்களைப் பற்றிய சுவாரஸ்யமான 10 தகவலாகும்.