எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி ! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!

செல்லிடப்பேசிகளில் ( Mobile Phone ) பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்கும், சூடாகும் என்று புகார்கள் இருந்து வரும் நிலையில், எளிதில் தீப்பிடிக்காத லித்தியம்-அயன் பேட்டரிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாக்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசி முதல் கார் வரை அனைத்திலும் பேட்டரி பயன்பாடு உள்ளது. இத்தகைய பேட்டரிகள், மின்னணு சாதனங்களின் ஆற்றல் சேமிப்பு கலனாக இருக்கின்றன. செல்லிடப்பேசிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரிகளின் மூலப்பொருள்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களாக உள்ளதால், செல்லிடப்பேசிகள் வெடித்து தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வருகின்றன.

இதுகுறித்து அந்த பேட்டரிகளில் எந்தவித எச்சரிக்கை குறியீடுகளும் வெளியிடப்படுவதில்லை. இத்தகைய பேட்டரிகளினால், பல செல்லிடப்பேசிகளை விமானங்களில் எடுத்துச் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க கடற்படையில், கப்பல்களில் இ-சிகரெட் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு எளிதில் தீப்பற்ற இயலாத பேட்டரிகளை உருவாக்க எண்ணினோம். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள லித்தியம்-அயன் பேட்டரி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். எளிதில் தீப்பற்றாத வேதிப்பொருள்களைக் கொண்டு இந்த பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை இரண்டாக அறுத்தாலும், தண்ணீருக்குள் மூழ்க வைத்தாலும் எந்த விதப் பிரச்னையும் இல்லை. அவை எளிதில் வெடிக்கவோ, தீப்பிடிக்கவோ செய்யாது என்று கூறினர்.

Related posts:

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்'!

கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநர் சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழா !

பாத்ரூமிற்குள் செல்போன் எடுத்துச்செல்வதால் ஏற்படும் விளைவுகள் !

ஜியோ ஃபைபர் சேவைகளின் விலைப்பட்டியல் இதுதான்!

*நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!*

இந்தியா # முதல் முறை # இதய பெருநாடி அறுவை சிகிச்சை # சிம்ஸ் மருத்துவமனை சாதனை #

நிதி பற்றாக்குறை ! 13,000 இணைப்பகங்களை மூடும் BSNL?

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!