எம் ஜி இசட் எஸ் எலக்ட்ரிக் எஸ் யூ வி காரை களமிறக்கியுள்ளது. !

பிரிட்டனை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டர் காருக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதனை தொடர்ந்து எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை களமிறக்கியுள்ளது. கடந்த மாதம் 21ல் முன்பதிவு துவங்கியது. முதல் கட்டமாக ரூ. 50,000 செலுத்தி 2,300 பேர் ‘புக்கிங்’ செய்துள்ளனர். ஜன. 23ல் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 44.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் தரும்.

பாஸ்ட் சார்ஜர் மூலமாக 50 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றலாம். முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கி.மீ., துாரம் பயணிக்கலாம். 0 – 100 கி.மீ.,வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டும்.