எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

AnyDesk என்ற செயலி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதுக்குறித்து RBI வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி இருக்கிறது. இந்தச் செயலியை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்தால், உங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வாலட் மற்றும் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை யுபிஐ (UPI) மூலம் திருடலாம் எனத்தெரிவித்துள்ளது.

இந்த செயலியை தரவிறக்கம் செய்யும் போது 9 இலக்க கோடு உருவாக்கப்படும். அதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து விவரங்களும் அவர்களால் திருட முடியும். எனவே இந்த செயலியை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த செயலியை பயன்படுவதனை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.