எங்களைக் குற்றவாளிப் போல நடத்துகிறார்கள் – அச்சக சங்கத்தினர் ஆதங்கம் !

சுபஸ்ரீ விவகாரத்தில் சர்ச்சையானதை அடுத்து அச்சக சங்கத்தினர் இன்னல்களை அனுபவிப்பதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விஷயம் சர்ச்சையானதை அடுத்து லாரி டிரைவர் மற்றும் அச்சகக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பேனர் வைத்தவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இது சம்மந்தமாக தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கிண்டியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் ‘எங்கள் வேலை பிரிண்டிங் செய்வது மட்டும்தான். அதைக் கட்டுவது எங்கள் வேலை அல்ல. அதைக் கட்டுபவர்கள் செய்யும் தவறினால் எங்களுடைய ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் எங்களைக் குற்றவாளிகள் போல நடத்துகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பதும் எங்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல’ எனக் கூறியுள்ளார்.

Related posts:

ஆஹா.. அறுசுவை! உணவே மருந்து!!
ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் ஏடிஎம் கார்டை பிளாக் செய்தாலும், பணத்தை எளிதாக எடுக்கலாம்.!
முதலிடம் பிடித்த தென் சென்னை..! வீடு வாங்க தென் சென்னையை தேர்வு செய்த சென்னை மக்கள்..!
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது !
ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம் !
டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் ! 144 கிமீ பயணிக்கும் !!
என்னவாயிற்று தமிழர்களுக்கு? பணப்புழக்கம் ஏன் இங்கு இல்லை.?.
சிடிசி குழுமத்திலிருந்து ரூ. 215 கோடி நிதியை திரட்டியிருக்கும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் .!