உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், ஆகியோரின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமாண்டிக் மெலடி வெளியாகியுள்ளது!

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருந்து வெளியான முதல் இரண்டு சிங்கிள்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இப்போது ராம் பொதினேனி மற்றும் காவ்யா தாப்பரின் ரொமாண்டிக் மெலடி, க்யா லஃப்டா இந்த காலநிலையை மேலும் இதமாக்க வெளியாகியுள்ளது.

க்யா லஃப்டா பாடலை கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்படியாக துள்ளல் இசை மற்றும் பாடகர்களுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா. கேட்கும்போதே தங்களின் உற்சாகம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்தப் பாடலில் சரியாக சேர்க்கப்பட்டுள்ள ஹூக் லைன் பாடலின் உற்சாகத்தை மேலும் கூட்டுகிறது. இது க்யா லஃப்டா பாடலைக் கேட்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருப்பதை உறுதி செய்கிறது.

தனுஞ்சய் சீபனா மற்றும் சிந்துஜா சீனிவாசன் ஆகியோர் தங்கள் குரல்கள் மூலம் பாடலை மேலும் உயர்த்தியுள்ளனர். இவர்களின் குரலுக்கு ஸ்ரீ ஹர்ஷ எமானியின் பாடல் வரிகள் மெருகூட்டியுள்ளது.  பாடலில் ராம் மற்றும் காவ்யா தாப்பருக்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைகிறது என்றால் மிகையில்லை.

டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்ஸ் மற்றும் புரோமோஷன்ஸ் செய்து வருகிறது.

பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: ராம் பொதினேனி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர், அலி, கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்நாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
உலகளாவிய வெளியீடு: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட், நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி,
தலைமை செயல் அதிகாரி: விசு ரெட்டி,
இசை: மணி ஷர்மா,
ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி,
ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா ,
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

Related posts:

நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் 'கைக்குட்டை ராணி' ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது!

ஆர் கே இன்டர்நேஷனல் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகம்!

திடீர் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்திலிருந்து 100 உயிர்களை காப்பாற்றியுள்ளது காவேரி மருத்துவமனை !

*மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறைக்கு கொடுத்துவரும் ஆதரவால் மற்றொரு மைல்கல்லை சாதனை உருவாகியுள்ளது!*

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன் வழங்கும் இரட்டை இன்னிசை மழை: கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

லியோ ஹம்சவிர்தன் என தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன் 2 புதிய படங்கள...

நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது, மறு தேர்தலுக்கு உத்தரவு !