உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மூலமாகவே மக்கள் அதிகத் துல்லியமான சர்வதேச சேனல்கள் வரையில் உங்கள் டிவியில் பார்க்க வசதி செய்யப்படும்.அதிகத் துல்லியமான டிவி சேனல் சேவையை வழங்க உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் உடன் இணைந்து செட்-டாப் பாக்ஸ் சேவையை வழங்க ஜியோ முடிவெடுத்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 42-வது வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜியோவின் பல அதிரடி அறிவிப்புகளை நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். முகேஷ் அம்பானி கூறுகையில், “இந்தியாவில் இன்றும் செயல்பாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு டிடிஹெச் சேவை என்பதை வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு அபாயமான போட்டியாகவே உள்ளது.
இதைத்தவிர்க்கவும் உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் உள்ளூர் பணியைத் தொடரவும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஜியோ முடிவு செய்துள்ளது. இந்தாண்டின் துவக்கத்திலேயே நாட்டின் முக்கிய ஆப்ரேட்டர்களான ஹேத்வே (Hathway), டென் (Den), ஜிடிபிஎல் ஆகிய நிறுவனங்களை ஜியோ வாங்கியுள்ளது. இந்நிறுவனங்கள்நாட்டின் 30ஆயிரம் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உடன் நேரடித் தொடர்பில் உள்ளது. தற்போது இந்நிறுவனங்களுடன் இணைந்து உலகத் தரத்திலான டிவி இணைப்பை மக்களுக்கு வழங்க உள்ளோம்.
இச்சேவையை நாங்கள் முழுவீச்சில் வெளியிட்ட பின்னர் உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மூலமாகவே மக்கள் அதிகத் துல்லியமான சர்வதேச சேனல்கள் வரையில் உங்கள் டிவியில் பார்க்க வசதி செய்யப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாது உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கும் வாழ்வாதாரம் வழங்கும் வாய்ப்பு ஆக இருக்கும்” என்றார்.