உளவுத்துறை ஒரு ஆட்சியோட மூளைன்னு சொல்லலாம்.. தமிழ்நாடு முழுவதும் நடக்கிற விஷயங்களை உடனுக்குடன் முதல்வருக்கு தெரிவிக்கிறதுக்குத்தான் உளவுத்துறை பயன்படுத்தப்படுது.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அதில சில பிரச்சினைகள் இருந்ததை விமர்சகர்கள் மட்டுமல்லாம ஸ்டாலினுக்கு நெருக்கமான பலரும் எடுத்துச் சொன்ன நிலையில உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் சில அதிரடிகளை ஜெயலலிதா பாணியில் உளவுத்துறையில் அரங்கேற்றியிருக்கிறாருன்னு சொல்றாங்க.
தமிழக அரசியல் வரலாற்றில் உளவுத்துறையை சிறப்பாக செயல்படுத்தியவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தான். ஆனால் கருணாநிதியின் உளவுத்துறை மேல்மட்ட அளவிலான விஷயங்களை மட்டும் கையிலெடுத்தது. அடிமட்டத்தில் வட்டச் செயலாளர்கள் முதல் வார்டு கவுன்சிலர்கள் வரை போட்ட ஆட்டங்களை கண்காணித்து உளவுத்துறை தகவல் அளிக்கவில்லையா, இல்லை அளிக்கப்பட்ட தகவல்களை சரியாக கவனிக்கப்படவில்லையான்னு தெரியலை. .இதன் விளைவு 2006-11 ஆட்சிக்குப்பின் திமுகவுக்கு பெருமளவில் பாதிப்பு வார்டு அளவிலான கட்சிக்காரர்களாலேயே ஏற்பட்டதுன்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க. உளவுத்துறையை முழுமையாக நம்பியவர் ஜெயலலிதா. எந்த அளவுக்குன்னா உளவுத்துறையை டிஜிபி அந்தஸ்து அதிகாரி கவனித்து வந்தாலும், ஐஜி அந்தஸ்து அதிகாரியிடமும் நேரடியாக தகவலை கேட்டு வாங்கினாரு.
டிஜிபி தன்னிடம் சில விஷயங்களை மறைக்கலாம் என்பதால் இருமுனை உளவுத்தகவல்களைக் கேட்டுப் பெற்றாரு. சில நேரம் ஜூனியர் உளவுப்பிரிவு அதிகாரிகளை நேரில் வரவழைத்து கூட தகவல்களை கேட்டு வாங்கியதும் உண்டு. இதுதவிர பத்திரிக்கை தகவல்களை வைத்து பலர்மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்காரு. ஒரு தடவை எப்போதோ வெளியான புகைப்படம் மீண்டும் பத்திரிகைல பிரசுரம் ஆன நிலையில் ஒரு அமைச்சரின் பதவியை பறித்தாரு.பெண் தொடர்பு புகாரில் ஒருவர் பதவி பறிபோனது. பல மந்திரிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை திரட்டி விரல் நுனியில் வைத்திருந்தார்.அதையெல்லாத்தையும் தான் கொடநாட்டில பாதுகாப்பா வைச்சிருந்தாரு. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை அதிகாரிகள் தவிர முன்னாள் டிஜிபி ஒருவரையும் தனியா இதுபோன்ற தகவல்களை திரட்ட பயன்படுத்திக்கிடீடாரு.
உளவுத்துறையை அரசியல் கட்சிகள் கூட்டணி விவகாரத்தில் பயன்படுத்துவதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே மிகுந்த ராஜதந்திரம் மிக்கவர்கள் என்பார்கள்.கூட்டணிய சேர்க்கிறது சேர்ந்த கூட்டணிய உடைக்கிறது எல்லாம் உளவுத்துறையோட வேலை தான்.1993ல திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டப்போ அவருக்கு முழு ஆதரவு குடுத்தது மறைந்த ஜெயலலிதா அவர்கள் தான்.உளவுத்துறையை வைச்சு தான் இந்த காரியத்தை செய்தாரு. தமிழ்நாடு முழுவதும் சுறறுப் பயணம் போனாரு வைகோ.எல்லா ஏற்பாடுகளையும் உளவுத்துறை மூலமா செஞ்சு குடுத்தது ஜெயலலிதா அவர்கள் தான். அதே போல 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியதும், முக்கியமாக தேமுதிகவை திமுகவின் பக்கம் போகாமல் நகர்த்தியதிலும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ராஜதந்திரம் உண்டு என்பார்கள்.மறைந்த கருணாநிதி அவர்கள் கூட தேமுதிகவைப் பத்தி பேசும்போது பழம் நழுவி பாலில் விழப்போகுதுன்னாரு.ஆனா தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில சேர்ந்த உடனே பழம் நழுவி தரைல உழுந்திடுச்சுன்னு கொஞ்சம் வருதீதத்தோட சொன்னாரு.
தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் செல்வாக்கு மட்டும் போதாது. கூட்டணி மிக முக்கியம். யாருடன் யார் கூட்டணி சேர்ந்தால் வெற்றி பெறலாம் என்பதை அரசுக்கு உளவுத்துறை ஒரு சர்வே எடுத்துக் கொடுக்கும். அதை கண்டுக்காம நடந்தாலும் தேர்தலில் தோல்வி அடைய வாய்ப்புண்டு. அப்படி நடந்த சம்பவங்கள் நெறைய இருக்கு.. அதேப்போல எந்தப்பிரச்சினை எந்த நேரம் பெரிசா வரும், யாரால் பிரச்சினை வரும்ங்கிறத உளவுத்துறை மோப்பம் பிடிச்சு அரசுக்கு அனுப்பும்.
அதுபோன்ற நேரங்களில் ஆள்வோர் அதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் அல்லது இருகோடுகள் தத்துவ அடிப்படையில் வேறு ஒரு பெரிய கோட்டை கிழித்து அதை சிறிய கோடாக்கிவிடுவார்கள். இப்போ பிஜேபி செய்யுதே அதே வேலையைத்தான்.
சில பிரச்சினைகள் வருவதற்கு முன்னரே உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கைத்தரும் அது அரசியல் நிகழ்வு, போராட்டம், மதக்கலவரம், ஜாதிக்கலவரம், மக்கள் பிரச்சினை என பலவிஷயங்களாக இருக்கலாம்.
அதை உணர்ந்து அரசு ஆட்சியை நகர்த்தினால் சிறப்பாக இருக்கும். எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் இதில் மிகுந்த திறமை மிக்கவர் என்பார்கள். காரணம் இவர்கள் உளவுத்துறையை மட்டும் நம்பவில்லை. இவர்களுக்கு பல நண்பர்கள் மூத்த பத்திரிகை ஆசிரியர்கள் உண்டு, பல செய்தியாளர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வதும் நடக்கும்.கருணாநிதி தினமும் வாக்கிங் போன பின்பு அனைத்து நாளிதழ்களையும் வாசிப்பார். பின்னர் அந்தந்த பத்திரிக்கை ஆசிரியர்களிடம் தேவைப்பட்டால் பேசுவார். அப்படி ஒரு சம்பவம் நடந்தது.பின்னால கட்சிக்காரர்கள், அமைச்சர்களுக்கு உடனடியாக உத்தரவு கொடுப்பார். பலர் வாங்கிக்கட்டிக்கொள்வார்கள் என அவரை அறிந்தவர்கள் சொல்வார்கள். இது ஆட்சியாளருக்கு அவசியமான பண்பு என்பதால் அவரால் செல்வாக்கு மிக்க ஆளுமையாக ஆட்சியிலும், கட்சியிலும் இருக்க முடிந்தது.
அடுத்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் தனது இடத்தை தக்க வைக்க போராட வேண்டியிருந்தது. இவரும் உளவுத்துறையை சிறப்பாக பயன்படுத்தினார். அதில் அவர் எடுத்த முடிவுகள் ஆட்சிக்கு அணுகூலமாக இருந்தது. அதனால் தான் வெற்றிப்பெற்ற இடங்கள் குறைவாக இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை சரியாமல் அதிமுக காப்பாற்றப்பட்டதுன்னு சொல்லலாம்.
அடுத்து வந்தவர் அமைதியானவர். அவர் திடீரென அமைதியானதால் அமைச்சர்களே குழம்பிப்போய்த்தான் நிக்கிறாங்க. சொல்லை விட செயலே சிறந்ததுன்னு ஆட்சி செய்கிறார். கொரோனா உச்சத்திலிருந்தபோது ஆட்சிப்பொறுப்பேற்ற ஸ்டாலின் நம்பி சில பொறுப்புகளை அமைச்சர்களுக்கு அளித்தார் அது வெற்றியும் பெற்றது.அதாவது கொரோனா சமயத்தில சுகாதார துறை அமைச்சர் மடீடுமில்லாம எல்லா அமைச்சர்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதுனாலத் தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிஞ்சது.உளவுத்துறையை விட அதிகமாக வல்லுநர்கள் கூறும் விஷயங்களை கையிலெடுத்ததால் கொரோனா, மாணவர்கள் கல்விப்பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை எல்லாத்திலயும் அவர் கவனம் செலுத்தி வெற்றிப்பெற முடிஞ்சது. வல்லுனர்கள் வல்லுனர்கள் தான் அவர்கள் உளவுத்துறையினர் அல்ல என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் திமுக அரசுக்கு எடுத்துக்காட்டியது.
அதில் ஒன்று லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு விஷயம் வெளியானது. அதில் பெரிதாக ஒன்றும் சிக்காதது. பல அதிகாரிகள் அதிமுக ஆட்சியில் செல்வாக்காக இருந்தவர்கள் இந்த ஆட்சியிலும் தொடர்வது, தென் மாநிலங்களில் சிறிது சிறிதாக தலைத்தூக்கும் ஜாதிய மதவாத அரசியல், தாதாக்கள் ஆதிக்கம், அதிர்ச்சியூட்டும் விதமாக கட்சி முன்னணியினர் தேவையற்ற தலையீடு அரசுக்கு தலைவலி போன்ற விஷயங்கள் பின்னடைவாக அரசியல் விமர்சகர்களால் வைக்கப்பட்டது.
தேனிலவு காலம் முடிந்தது இனி ஆக்ஷன் என எதிர்க்கட்சிகள் களமிறங்க, விசிகவினருடன் போலீஸ் மோதல் என திருமாவளவன் ஆதங்கப்பட பல காட்சிகள் அரங்கேறிவிட்டன. அமைச்சர்கள், கட்சிக்காரர்களை கண்காணிப்பது, கட்சி முன்னணியினர் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் தடுப்பது என பல பிரச்சினகள் கவனிக்க வேண்டிய விஷயங்களாக முதல்வர் முன் வைக்கப்பட்டது.
விளைவு உளவுத்துறையை சீர்ப்படுத்த முதல் அடி எடுத்து வைத்துள்ளார் முதல்வர்ன்னுசொல்லலாம். அரசியல் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை கவனிக்க இதுவரை இல்லாத புது விஷயமா கூடுதலாக சரவணன் என்கிற ஒரு எஸ்.பி அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்பட்டிருக்காரு.. அவருக்கான பணிகள் ஒதுக்கப்பட்டிருக்குது.
அதில் அரசியல் விவகாரங்களை அவர் கவனிப்பாருங்கிறது முக்கியமான ஒண்ணு. இதன் மூலம் முதற்கட்ட நகர்வாக உளவுத்துறையில் முதல்வர் கவனம் செலுத்தத் துவங்கி இருக்கிறாருங்கிறாங்க.ஆனால் அரசியல் விமர்சகர்கள், சில காவல் உயர் அதிகாரிகளிடம் பேசியபோது இது போதாது, உயர்மட்ட அளவில் உளவுத்துறையில் மாற்றம் வேணும்னு சொல்றாங்க இதையெல்லாம் கவனிக்கும் முதல்வர் அதையும் கவனிக்காமலா இருப்பருங்கிறாங்க திமுக உடன்பிறப்புகள்.
உளவுத்துறையின் இந்த மாற்றம் மிக அவசியமானது. மற்ற துறைகளில் நேர்மையான கண்டிப்புமிக்க அதிகாரிகள் இருப்பதைவிட உளவுத்துறைக்கு அப்படிப்பட்ட அதிகாரிகள் நியமனம் அவசியம், தகவல் முறையாக மறைக்கப்படாமல் உள்ளது உள்ளபடி சொல்லப்படணும் கூடுதலாக பல தகவல்களையும் முதல்வருக்கு உளவுத்துறை சொல்லணும்.உளவுத்துறை ஒரு ஆட்சியின் கண், காது, மூளைன்னு சொல்லலாம். திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அதில் சில பிரச்சினைகள் இருந்ததை விமர்சகர்கள் பலரும் சுட்டிக்காட்டிய நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் சில அதிரடிகளை ஜெயலலிதா பாணியில் உளவுத்துறையில் அரங்கேற்றியுள்ளார்..
.தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் செல்வாக்கு மட்டும் போதாது. கூட்டணி மிக முக்கியம். யாருடன் யார் கூட்டணி சேர்ந்தால் வெற்றி பெறலாம் என்பதை அரசுக்கு உளவுத்துறை அளிக்கும். அதை ஏற்காமல் நடந்தாலும் தேர்தலில் தோல்வி அடைய வாய்ப்புண்டு. அப்படி நடந்த முன் கதைகள் உண்டு. அதேப்போன்று எந்தப்பிரச்சினை எந்த நேரம் பெரிதாக எழுகிறது, யாரால் பிரச்சினை என்பதை உளவுத்துறை மோப்பம் பிடித்து அரசுக்கு அனுப்பும்.
அதுபோன்ற நேரங்களில் ஆள்வோர் அதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் அல்லது இருகோடுகள் தத்துவ அடிப்படையில் வேறு ஒரு பெரிய கோட்டை கிழித்து அதை சிறிய கோடாக்கிவிடுவார்கள். சில பிரச்சினைகள் வருவதற்கு முன்னரே உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கைத்தரும் அது அரசியல் நிகழ்வு, போராட்டம், மதக்கலவரம், ஜாதிக்கலவரம், மக்கள் பிரச்சினை என பலவாக இருக்கலாம்.
அதை உணர்ந்து அரசு ஆட்சியை நகர்த்தினால் சிறப்பாக இருக்கும். எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் இதில் மிகுந்த திறமை மிக்கவர் என்பார்கள். காரணம் இவர்கள் உளவுத்துறையை மட்டும் நம்பவில்லை. இவர்களுக்கு பல நண்பர்கள் மூத்த பத்திரிகை ஆசிரியர்கள் உண்டு, பல செய்தியாளர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வதும் நடக்கும்.விளைவு உளவுத்துறையை சீர்ப்படுத்த முதல் அடி எடுத்து வைத்துள்ளார் முதல்வர் எனலாம். அரசியல் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை கவனிக்க என்றுமில்லாத ஒன்றாக கூடுதலாக சரவணன் என்கிற ஒரு எஸ்.பி அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் அரசியல் விவகாரங்களை அவர் கவனிப்பாருங்கிறது முக்கியமான ஒண்ணு. இதன் மூலம் முதற்கட்ட நகர்வாக உளவுத்துறையில் முதல்வர் கவனம் செலுத்தியிருக்கிறாருங்கிறாரங்க.. ஆனால் அரசியல் விமர்சகர்கள், சில காவல் உயர் அதிகாரிகள் என்ன சொல்றாங்கன்னா இது போதாது, உயர்மட்ட அளவில் உளவுத்துறையில் மாற்றம் பண்ணனும்னு சொல்றாங்க. இதையெல்லாம் கவனிக்கும் முதல்வர் அதையும் கவனிக்காமலா இருப்பார்னு சொல்றாங்க திமுக முக்கியஸ்தர்கள்.