இனி நிலத்தடி நீரை பயன்படுத்தினாலும் கட்டணம் ..! மோடி அரசின் அடுத்த தாக்குதல்…!!

2019 ஜூன் மாதம் முதல் எந்த வகையில் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தினாலும் கட்டணம் செலுத்த வேண்டும். நம் வீட்டில் இருக்கும் சொந்த போர்வெல் ( ஆழ்குழாய் கிணறு ) மூலம் தண்ணீர் எடுத்தாலும் அரசிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என மோடி அரசு அறிவித்திருக்கிறது. இது மக்களிடைய கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி என்ற பெயரில் வரும் 2019 ஜூன் மாதத்திலிருந்து, நிலத்தடியில் இருந்து யார் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CGWA) அறிவித்திருக்கிறது. அதற்கு நீர் பாதுகாப்பு கட்டணம் என பெயரிட்டிருக்கிறது.

நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி என்ற பெயரில் வரும் 2019 ஜூன் மாதத்திலிருந்து, நிலத்தடியில் இருந்து யார் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CGWA) அறிவித்திருக்கிறது. அதற்கு நீர் பாதுகாப்பு கட்டணம் என பெயரிட்டிருக்கிறது.

அதன்படி , நிலத்தில் இருந்து போர் வேல் அல்லது ஆழ்குழாய் கிணறு போன்றவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் தொழிற்சாலைகள், சுரங்க நீர் வடிகால் பிரிவு, மற்றும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் கண்டிப்பாக அரசாங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற (NOC) வேண்டும். அப்படி பெறும் போது அவர்கள் பயன்படுத்தும் அளவிற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

தனி நபர் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீருக்கு, வீட்டில் போட்டிருக்கும் போர்வெல் குழாயில் இருந்து நீரை வெளியற்றும் குழாயின் அளவு 1 டயாமீட்டர் அளவிற்கு மேல் இருந்தால் அதற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் நாடு முழுவதும், 2019 ஜூன் முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு தடையில்லா சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கென்று பிரத்யேகமாக சிஜிடபிள்யூஏ என்ற செயலியை நீர்வள ஆதார அமைச்சகம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பிப்பவர் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கேற்றவாறு கட்டணத்திலும் மாறுபாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

20 கன மீட்டர் வரை (ஒரு கன மீட்டர் = 1,000 லிட்டர்) நீர் எடுத்தால் அது ‘பாதுகாப்பான’ பிரிவின் கீழ் வரும். இதற்கு ஒரு கன மீட்டருக்கு ரூ.3 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட கன மீட்டர் நீர் எடுத்தால் ‘அதிகமாக இயற்கை வளத்தை பயன்படுத்தும் பிரிவின் கீழ் வந்து விடும். அப்படி வரும் போது ஒரு கன மீட்டருக்கு கூடுதலாக ரூ. 100 செலுத்த வேண்டும்.
குடியிருப்பு திட்டங்களுக்கு தண்ணீரை பயன்படுத்தும் போது ஒரு கன மீட்டருக்கு 1 முதல் 2 ரூபாய் வரை செலுத்த வேண்டும். ஆனால் அதற்கும் தனியாக அரசிடம் இருந்து இது குடியிருப்பு திட்டம் என்பதற்கான தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

இதற்கு மோடி அரசு “இவை தண்ணீருக்கான கட்டணம் இல்லை.. தண்ணீர் பாதுகாப்பு கட்டணம்” என்று பெயர் வைத்திருக்கிறது.. இந்த வருமானத்தை கொண்டு நிலத்தடி நீர் மறுசீரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும் இக்கட்டணங்கள், முழுமையாக ஆராய்ந்து, தொழில்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டது” என்று மத்திய நிலத்தடி நீர் வாரிய தலைவர் கே.சி.நயக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், நிலத்திலிருந்து நேரடியாக எடுக்கப்படும் தண்ணீர் பெரும்பாலும் 228 BCM (பில்லியன் கன மீட்டர்) பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், 90 சதவிகிதம் ஆகும். இது தவிர 25 பில்லியன் கன மீட்டர் நீர் குடிநீர் மற்றும் வீட்டு தேவை பயன்பாட்டிற்கு எடுக்கப்படுகிறது.
உலகில் அதிமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியாக இருந்து வருகிறது. உலக நிலத்தடி நீரில் 25 சதவிகிதத்தை இந்தியா பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பாதுகாப்பிற்காக பயன்படுத்துபவர்கள், மின்சாரமின்றி நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. நாட்டில் நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தும் விவசாயத்துறைக்கு தற்போதைக்கு கட்டணம் இல்லை என்று அறிவித்திருக்கிறது. ஆனால் கூடிய விரைவில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த நடைமுறை என நீரியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.