இனிப்பு அதிகமாக சாப்பிட்டால் விந்தணுக்கள் எண்ணிக்கையும் வீரியமும் குறையும் ..!

விந்துக்களின் சீரான இயக்கங்கள் மற்றும் நகர்வுகளுக்கு, நாம் சாப்பிடும் உணவு முறைகள் முக்கிய காரணமாக அமைகின்றன. இதுதொடர்பாக, சுவீடனில் உள்ள லிங்கோபிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், விந்துக்களின் தரம் மற்றும் செயல்பாடுகள், நமது வாழ்க்கை மற்றும் உணவுமுறை மற்றும் சுற்றுப்புற சூழல் காரணிகளால் பெரிதும் பாதிப்பு அடைகின்றன. உடற்பருமன் மற்றும் அதுதொடர்பான நோய்கள், டைப் 2 வகை நீரிழிவு போன்றவை, விந்துக்களின் தன்மைகளில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.எபிஜெனிடிக் நிகழ்வுகளில் விஞ்ஞானிகள் புதிய ஆய்வினை மேற்கொண்டனர். இதில் மரபணு மூலக்கூறு மற்றும் டிஎன்ஏ வரிசையில் மாற்றங்கள் நிகழாத போதும், அதன் இயற்பியல் பண்புகள் அல்லது மரபணு வெளிப்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன.
ஆண் பழந்தின்னி பூச்சிகளில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், பெண் பூச்சிகளுடனான உடலுறவிற்கு முன் சர்க்கரை அதிகம் வழங்கப்பட்டது. இதன்பலனாக, அதிக எடையுடன் கூடிய சிறு பூச்சிகள் பிறந்தன. இதே சோதனை எலிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. அதன் விந்துக்களில் உள்ள ஆர்என்ஏவின் சிறுபகுதி, எபிஜெனிடிக் நிகழ்வுகளுக்கு உட்பட்டு, அடுத்த தலைமுறை மாற்றங்களுடன் இருப்பதற்கு முக்கிய பங்கு வகிப்பது ஆய்வில் தெரியவந்தது.இந்த குறிப்பிட்ட சிறு பகுதி ஆர்என்ஏக்கள், மனிதர்கள், எலிகள், பழந்தின்னி பூச்சிகள் உள்ளிட்டடவைகளில் வழக்கத்திற்கு மாறாக, மிக அதிகமாக காணப்படுகின்றன. மனித விந்துக்களில் உள்ள இந்த ஆர்என்ஏ சிறுபகுதிகளில், அதீத சர்க்கரை பயன்பாடு, ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் ஆய்வை துவக்கினர்.
இரண்டு வார கால அளவிலான இந்த ஆய்வில் சாதாரணமான, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத, அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடக்கூடிய 15 நபர்கள் உட்படுத்தப்பட்டனர். நோர்டிக் நியூட்ரிஷன் அமைப்பு பரிந்துரைப்பின்படி, இந்த நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இரண்டாவது வாரத்தில் இவர்களுக்கு தினமும் 3.5 லிட்டர் பிஜ்ஜி பானமும், 450 கிராம் சாக்லேட்களும் வழங்கப்பட்டன.
ஆய்வு துவங்குவதற்கு முன்பாகவே, அவர்களின் விந்துக்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட மற்ற காரணிகள் குறித்து வைக்கப்பட்டன. பின் முதல் வார முடிவிலும் ( ஆரோக்கியமான உணவு வகைகள் வழங்கப்பட்ட தருணம்) மற்றும் இரண்டாம் வார முடிவிலும் ( கூடுதலாக சர்க்கரை அதிகம் கொண்ட உணவு வகைகளை வழங்கியது) விந்துக்களின் செயல்பாடுகள் குறித்து குறிப்பு எடுக்கப்பட்டது.இந்த ஆய்வு துவங்குவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட குறிப்பில், மூன்றில் ஒரு பிரிவினருக்கு, விந்துக்களின் செயல்பாடு மிகக் குறைந்த அளவில் இருந்தது.இந்த ஆய்வு நடைபெற்று வந்த போது, அவர்களின் விந்துக்களின் செயல்பாடு சாதாரண நிலைக்கு வந்த்தை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மிகவும் குறைந்த காலகட்டத்தில் இவர்களின் விந்துக்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கு, அவர்களது உணவுமுறையும் ஒரு காரணமாக அமைந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது தங்களது ஆய்வில் முக்கியமான படிநிலை என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடலில் ஆர்என்ஏ சிறு பகுதிகள் அதிகமாக காணப்பட்டதாகவும், இதுவே விந்துக்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் என விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு முடிவுகளில் குறிப்பிட்டு உள்ளனர்.