இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மத்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!

இந்தியாவை டிஜிட்டல் ஆக்குவதற்கும், இந்திய அரசின் முன்முயற்சியான ‘டிஜிட்டல் இந்தியா’வின் பார்வைக்கு ஏற்பவும், இந்திய குடிமக்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்காக இந்திய அரசு ஒவ்வொரு முறையும் பல்வேறு மொபைல் ஆப் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்திய அரசு அறிமுகப்படுத்திய மிகவும் பயனுள்ள 7 மொபைல் ஆப் பயன்பாடுகளைப் பார்ப்போம்.

BHIM-பிஎச்ஐஎம் : மொபைல் போன் வழியாக வேகமாக, பாதுகாப்பான, நம்பகமான, பணமில்லா பரிவர்த்தனை செய்ய பாரத் இண்டர்ஃபேஸ் பார் மணி(BHIM) உதவுகின்றது. யூபிஐ போன்ற ஒரு செயலியே பிஎச்ஐஎம். பிஎச்ஐஎம் செயலி இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த செயலி இந்திய மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்றே கூரலாம். பண பரிமாற்றத்திற்கான முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்களது நண்பர்கள், குடும்பம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அனுப்பலாம் பெறலாம். யூபிஐ சேவையை ஏற்காத வங்கிகளுக்கும் ஐஎப்எஸ்சி(IFSC) மற்றும் எம்எம்ஐடி(MMID) பயன்படுத்து பணத்தை அனுப்ப இயலும்.

ஸ்வச் பாரத் அபியான் ஆப் :ஒரு வட்டாரத்தில் ஏராளமான குப்பைகள் இருந்தால், நகராட்சி துறையைச் சேர்ந்த எவரும் அதை சுத்தம் செய்ய பல நாட்கள் வரவில்லை என்றால், அதன் ஒரு படத்தைக் கிளிக் செய்து அதை ஸ்வச் பாரத் அபியான் ஆப்பில் இடுகையிடவும். பின்பு தேவையானதைச் செய்ய இது தானாகவே அருகிலுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்படும். இதன் மூலம் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை அகற்றப்படும்.

GST Rate Finder : இது பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் எவ்வளவு என அறிய பயன்படுகிறது. ஆப்லைனிலும் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் தற்போதைய மற்றும் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி விகிதங்களைப்பற்றி அறிய இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.

உமாங் : உலகளாவிய சைபர் ஸ்பேஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உமாங் (உமாங் (UMANG)) எனும் செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலியில் EPFO, PAN, NPS, CBSE, பாரத் கியாஸ், பாஸ்போர்ட், ஜி.எஸ்.டி., எச்.பி., பாரத் மற்றும் இன்டேன் கியாஸ், இபாத்ஷாலா, வருமான வரி, டிஜி சேவக், கார்ப் இன்சூரன்ஸ் மற்றும் பல்வேறு சேவைகளை இயக்க முடியும்.

எம்பாஸ்போர்ட் சேவா : இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் பாஸ்போர்ட் பெறும் வகையில், எம்பாஸ்போர்ட் சேவா (mPassportSeva) செயலியில் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்களும் அதிக அளவில் பயனடைவார்கள். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் எம்பாஸ்போர்ட்சேவா ஆப் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த செயலி ‘கன்சுலர், பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு’ (Consular, Passport and Visa (CPV) Division) மூலம் வழங்கப்படுகிறது. தற்போதைய பாஸ்போர்ட்சேவா வலைத்தளத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளை கொண்டே இந்த செயலியில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும். எனினும் மொபைல் செயலியின் இன்டர்ஃபேஸ் புதிதாய் மாற்றப்பட்டு இருக்கிறது.

Online RTI-ஆன்லைன் ஆர்டிஐ : ஆன்லைன் ஆர்டிஐ ஆப் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். ஆர்டிஐ என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகும். ஆர்டிஐ தாக்கல் செய்ய விரும்பும் மக்கள் இந்த பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இங்கே, virtual lawyers (வக்கீல்கள்) மற்றும் நிபுணர்களின் உதவியுடன் தகவல் அறியும் உரிமையை தாக்கல் செய்யலாம், அவர்கள் உங்கள் சார்பாக ஒரு விண்ணப்பத்தை உருவாக்கி தகவல் அறியும் துறைக்கு ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் ஒருவர் வரைவில் மாற்றங்களைச் செய்யலாம்.

MyGov : இது ஒரு இந்திய குடிமகனின் ஈடுபாட்டு தளமாகும், இது ஒரு குடிமகனை இந்தியாவின் ஆட்சியில் பங்கேற்க அனுமதிக்கிறது. இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த பயன்பாடு, மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசு அமைப்புகளுடன் மக்களை இணைப்பதன் மூலம் யோசனைகள், கருத்துகள் மற்றும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது