இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது !

2024 மார்ச் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஆண்டுக்கான நிதிசார் முடிவுகள்
வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது நிகர இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹1447 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹2247 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 55% வளர்ச்சி கண்டிருக்கிறது.வரிக்கு முந்தைய இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹1452 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹3057 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 111% உயர்ந்திருக்கிறது.செயல்பாட்டு இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹4016 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹4305 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 7% உயர்ந்திருக்கிறது
நிகர வட்டி வருவாய், மார்ச்’23-ல் பதிவான ₹5508 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹6015 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 9% உயர்ந்திருக்கிறது
கட்டணம் சார்ந்த வருவாய், மார்ச்’23-ல் பதிவான ₹914 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹970 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 6% உயர்ந்திருக்கிறது
சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), மார்ச்’23-ல் இருந்த 0.82% என்பதிலிருந்து மார்ச்’24-ல் 33 bps உயர்ந்து 1.15% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), மார்ச்’23-ல் இருந்த 15.48% என்பதிலிருந்து மார்ச்’24-ல் 358 bps மேம்பட்டு 19.06% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
கடன்கள் மீதான வருவாய் (YoA), மார்ச்’23-ல் இருந்த 8.17% என்பதிலிருந்து மார்ச்’24-ல் 64 bps உயர்ந்து 8.81% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
முதலீடுகள் மீதான வருவாய் (YoI), மார்ச்’23-ல் இருந்த 6.62% என்பதிலிருந்து மார்ச்’24-ல் 26 bps உயர்ந்து 6.88% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
மொத்த கடன்கள், மார்ச்’23-ல் பதிவான ₹473586 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் 13% வளர்ச்சி பெற்று ₹533773 கோடியாக அதிகரித்திருக்கிறது
RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் மார்ச்’23-ல் இருந்த ₹272679 கோடி என்ற அளவிலிருந்து மார்ச்’24-ல் ₹309918 கோடியாக உயர்ந்து 14% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 62.21% ஆக இருக்கிறது. ரீடெய்ல், விவசாயம், MSME (RAM) ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 15%, 19% மற்றும் 6% என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 11%, வாகனக்கடன் 49% மற்றும் தனிநபர் கடன் 10% என அதிகரித்திருக்கின்றன
ஒழுங்குமுறை தேவைப்பாடான 40%-க்கு எதிராக ANBC-யின் ஒரு சதவீதமாக 43.82% பதிவுடன் முன்னுரிமை துறைக்கான கடன்கள் ₹178527 கோடி என பதிவாகியிருக்கிறது
மொத்த டெபாசிட்கள் முந்தைய ஆண்டைவிட 11% வளர்ச்சி கண்டு மார்ச்’24-ல் ₹688000 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் CASA டெபாசிட் 8%, சேமிப்பு டெபாசிட் 7% மற்றும் நடப்பு டெபாசிட் 9% அதிகரித்திருக்கிறது
31 மார்ச்’24 அன்று உள்நாட்டு CASA விகிதம் 42.31% என பதிவாகியிருக்கிறது
31 மார்ச்’24 அன்று CD விகிதம் 77.58% என பதிவாகியிருக்கிறது
GNPA (மொத்த வாராக்கடன்கள்) மார்ச்’23-ல் இருந்த 5.95% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 200 bps குறைந்து 3.95% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) மார்ச்’23-ல் இருந்த 0.90% லிருந்து மார்ச்’24-ல் 47 bps குறைந்து 0.43% ஆக பதிவாகியிருக்கிறது
வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO – தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), மார்ச்’23-ல் இருந்த 93.82% லிருந்து மார்ச்’24-ல் 252 bps அதிகரித்து 96.34% ஆக பதிவாகியிருக்கிறது
நழுவல் விகிதம், மார்ச்’23-ல் 2.43% ஆக இருந்ததுடன் ஒப்பிடுகையில் மார்ச்’24-ல் 132 bps அதிகரித்து 1.11% ஆக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
மூலதன போதுமான நிலை விகிதம் 16.44% என்பதாகவும் மற்றும் CET-I, முந்தைய ஆண்டைவிட 63 bps உயர்ந்து 13.52% ஆக பதிவாகியிருக்கிறது மற்றும் அடுக்கு I மூலதனம் 55 bps வளர்ச்சி கண்டு 14.03% என்ற அளவில் இருக்கிறது, நிகர இலாபம், டிசம்பர்’23-ல் பதிவான ₹2119 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹2247 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 6% வளர்ச்சி கண்டிருக்கிறது
செயல்பாட்டு இலாபம், டிசம்பர்’23-ல் பதிவான ₹4097 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹4305 கோடியாக 5% அதிகரித்திருக்கிறது
நிகர வட்டி வருவாய், டிசம்பர்’23-ல் பதிவான ₹5815 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹6015 கோடியாக உயர்ந்திருக்கிறது
சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), டிசம்பர்’23-ல் இருந்த 1.11% என்பதிலிருந்து மார்ச்’24-ல் உயர்ந்து 1.15% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
கடன்கள் மீதான வருவாய் (YoA), டிசம்பர்’23-ல் இருந்த 8.78% என்பதிலிருந்து மார்ச்’24-ல் உயர்ந்து 8.81% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது மற்றும் முதலீடுகள் மீதான வருவாய் (YoI), டிசம்பர்’23-ல் இருந்த 6.80% என்பதிலிருந்து மார்ச்’24-ல் உயர்ந்து 6.88% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), டிசம்பர்’23-ல் இருந்த 3.49% என்பதிலிருந்து மார்ச்’24-ல் வளர்ச்சி கண்டு 3.52% ஆக அதிகரித்திருக்கிறது

தேவைப்படுகிற ஒப்புதல்களுக்கு உட்பட்டு நிதியாண்டு 24-க்கு ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹12 என்ற 120% ஈவுத்தொகையை (dividend) வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்திருக்கிறது.

நிகர இலாபம், நிதியாண்டு’23-ல் பதிவான ₹5282 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’24-ல் ₹8063 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 53% வளர்ச்சி கண்டிருக்கிறது
வரிக்கு முந்தைய இலாபம், நிதியாண்டு’23-ல் பதிவான ₹5915 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’24-ல் ₹10951 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 85% உயர்ந்திருக்கிறது
செயல்பாட்டு இலாபம், நிதியாண்டு’23-ல் பதிவான ₹15271 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’24-ல் ₹16840 கோடியாக 10% அதிகரித்திருக்கிறதுநிகர வட்டி வருவாய், நிதியாண்டு’23-ல் பதிவான ₹20225 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’24-ல் ₹23274 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 15% அதிகரித்திருக்கிறதுசொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), நிதியாண்டு’23-ல் இருந்த 0.77% என்பதிலிருந்து நிதியாண்டு’24-ல் 30 bps உயர்ந்து 1.07% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.
பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), நிதியாண்டு’23-ல் இருந்த 14.73% என்பதிலிருந்து நிதியாண்டு’24-ல் 451 bps மேம்பட்டு 19.24% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
உள்நாட்டளவில் நிகர வட்டி வருவாய் (NIM), நிதியாண்டு’23-ல் இருந்த 3.41% என்பதிலிருந்து நிதியாண்டு’24-ல் 13 bps அதிகரித்து 3.54% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
கடன்கள் மீதான வருவாய் (YoA), நிதியாண்டு’23-ல் இருந்த 7.76% என்பதிலிருந்து மார்ச்’24-ல் 96 bps உயர்ந்து 8.72% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
முதலீடுகள் மீதான வருவாய் (YoI), மார்ச்’23-ல் இருந்த 6.45% என்பதிலிருந்து மார்ச்’24-ல் 35 bps உயர்ந்து 6.80% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது.வருவாய்க்கான செலவு விகிதம் நிதியாண்டு’24-க்கு 45.92% ஆக இருக்கிறது

வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:இவ்வங்கி, 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5847 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1985 கிராமப்புறங்களிலும், 1530 சிறு நகரங்களிலும், 1174 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1158 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IBU-யும் இருக்கிறது.இவ்வங்கி, 4937 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 11297 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.

டிஜிட்டல் வங்கிச்சேவை:

டிஜிட்டல் சேனல்கள் வழியாக நிகழ்ந்திருக்கும் பிசினஸ் ₹81,250 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. இதுவரை மொத்தத்தில் 78 டிஜிட்டல் பயணங்கள், பயன்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 45% உயர்ந்து 1.67 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.UPI பயனாளிகள் மற்றும நெட் பேங்கிங் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் முந்தைய ஆண்டைவிட (YoY) 37% அதிகரித்து முறையே 1.75 கோடி மற்றும் 1.06 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது.
புதிதாக சேர்ந்துள்ள UPI QR வர்த்தகர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் அளவைவிட 43% உயர்ந்திருக்கிறது; PoS முனையங்களின் மொத்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 58% அதிகரித்து 21,580 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்:

BSFI பிரிவில் 2023-24 ஆண்டுக்காக பெரிதும் விரும்பப்படும் பணியிடம் என மார்க்ஸ்மென் டெய்லி-ஆல் இவ்வங்கிக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அனைத்து பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் & தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாக்க இயக்குநர்களுக்கான APY லீடர்ஷிப் பினாக்கிள் நிகழ்வில் நேர்த்திக்கான முன்மாதிரி விருதில் இவ்வங்கி முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது.
2023 பேங்கிங் விருதுகள் நிகழ்வில், அதிவேகமாக வளர்ந்துவரும் பொதுத்துறை வங்கி என்ற விருதை தலால் ஸ்ட்ரீட் இன்வெஸ்ட்மென்ட் ஜர்னல் (DSIJ) வழங்கியிருக்கிறது.
“பேரடைஸ்” செயல்திட்டத்திற்கு AiX சூழலுக்காக கிளவுட் கம்ப்யூட்டிங்-ஐ செயல்படுத்தியமைக்காக வங்கி தொழில்துறையில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்காக BFSI விருது, கவர்னன்ஸ் நவ் அமைப்பால் இவ்வங்கிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
2023-ம் ஆண்டின் CTO – மிகச்சிறந்த டிஜிட்டல் நிலைமாற்ற தலைவர் என்பதற்காக இவ்வங்கியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) அவர்களுக்கு BFSI விருது தரப்பட்டிருக்கிறது.
IBA-வின் 19வது வருடாந்திர பேங்கிங் தொழில்நுட்ப கருத்தரங்கு, கண்காட்சி மற்றும் விருதுகள் நிகழ்வில் ‘சிறந்த தொழில்நுட்ப வங்கி – சிறப்பு விருது’ என்பதனை இவ்வங்கி பெற்றிருக்கிறது.

எமது கூர்நோக்கம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு திறனதிகாரம் பெற்ற பணியாளர்களின் அறிவுக்கூர்மை மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பான பயன்பாட்டின் வழியாக மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதே எமது கூர்நோக்கம். மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையின் கலவை வழியாக வங்கி செயல்பாடுகளை எளிமையாக்குவதும் அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடியதாக, வசதியானதாக மற்றும் பாதுகாப்பானதாக ஆக்குவதும் எமது நோக்கமாகும்.
சிரமமற்ற, சவுகரியமான வங்கிச் சேவை அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறுமாறு ஏதுவாக்குவதற்கு பல்வேறு டிஜிட்டல் திட்டங்களின் தொகுப்பை எமது வங்கி அறிமுகம் செய்திருக்கிறது. ஒற்றை கிளிக் செய்வதன் மூலம், கடன்களுக்கு ஒருவரால் விண்ணப்பிக்க இயலும். வேளாண் கடன், நகைக்கடன், சிசு முத்ரா, தனிநபர் கடன், MSME & KCC கடன்களை புதுப்பித்தல், குறித்த கால டெபாசிட்டுகள் மற்றும் சேமிப்பு கணக்குகளை தொடங்குதல் என பல்வேறு சேவைகளை பெறமுடியும். குறைந்த செலவிலான டெபாசிட்டுகளை பெறுவதற்கு, இந்தியாவின் முக்கிய நகரங்களை கடப்பாடுக்கான தனிப்பிரிவுகளை வங்கி நிறுவியிருக்கிறது; மதிப்புமிக்க கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு பிரத்யேக சேவை நேர்த்தியாக கிடைப்பதை உறுதிசெய்வது இதன் இலக்காகும்.
ஒருகூரையின்கீழ் நிதி திட்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பையும் வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வழியாக நேர்மறையான மாற்றத்தை முன்னெடுக்கும் நம்பகமான கூட்டாளியாகத் திகழ்வது எமது நோக்கமாகும். தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிற நிதிசார் தளத்தில் எமது வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவையைப் பெற்று வளர்ச்சி காண்பதற்கு ஏதுவாக்குவதன் வழியாக இதை சாத்தியமாக்குவது எமது குறிக்கோளாகும்.

Related posts:

ZEE5 app-ல் போலீஸ் டைரி 2.0 வெற்றி பெறும் ! தயாரிப்பாளர் குட்டிபத்மினி நம்பிக்கை !
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம் !
பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கும் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு !
கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் 'கோட்...
2020ம் ஆண்டில் ஜீ தமிழ் சினி விருதுகள் !
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு விரைவில் அனுமதி ! இனி பைக் வச்சிருந்தாலே சம்பாதிக்கலாம்..!!
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத துணிச்சலான காட்சியில் நடித்த சிருஷ்டி டாங்கே !
’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!