மாற்று வழியிலான கல்வியை அளிக்கும் வகையில் ஆன்-லைன் முறை அறிமுகம்.
உயர்கல்வியை எதிர்நோக்கும் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளும் கட்டணம் மற்றும் நேரத்தில் இந்த கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆன்-லைன் வழியே எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழு வகைப்படுத்திய மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் அங்கீகரித்தபடியே இந்தப் புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வியை எதிர்நோக்கும் அனைவரும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய கட்டணம் மற்றும் நேரத்தில் அதனைப் படிக்கும் வகையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்து கொண்டே உயர்கல்வியைப் படிக்க நினைப்போரின் வசதிக்காக ஆன்-லைன் பாடத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் தங்கள் ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விடாமல் உயர் கல்வியைப் படிக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியில் பி.எஸ். அப்துர் ரகுமான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் ஏ.பீர் முகமது, பதிவாளர் டாக்டர் ஏ.ஆசாத், கூடுதல் பதிவாளர் டாக்டர் என். ராஜா ஹூசைன், இயக்குநர் (சேர்க்கைகள்) டாக்டர் எஸ்.எஸ்.எம். அப்துல் மஜீத், இயக்குநர் (உயர்நிலை கல்வி சேர்க்கை) டாக்டர் எஸ்.காஜா மொகைதீன், இயக்குநர் (தொலைநிலை மற்றும் ஆன்-லைன் கல்வி) டாக்டர் வி.ரேமண்ட் உத்திரியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்காலத்துக்கு ஏற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மிகச் சிறப்பான முறையில் ஆன்-லைன் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
திறமையான, தகுதி படைத்த ஆசிரியர்களைக் கொண்டு ஆன்-லைன் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில் துறை ரீதியிலான நடைமுறை சார்ந்த அம்சங்கள் இணையம் வழியே விவாதிக்கப்பட உள்ளன. கற்பித்தல் மற்றும் கற்றுக் கொள்வதற்கு மிகச்சிறந்த அதிநவீன தொழில்நுட்ப மேலாண்மை அமைப்பு பயன்படுத்தப்பட உள்ளது.
ஆன்-லைன் பாடத்தில் இணைவதற்கான சேர்க்கை நடைமுறைகள் பி.எஸ். அப்துர் ரகுமான் கல்லூரியில் நடைபெற்று வருகின்றன.
மேலும் சேர்க்கை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள:
www.online.crescent-institute.edu.in / www.crescent.education or call 95432 77888.