ஆன்லைனில் உடனே பான் கார்டு ! எங்கேயும் அலைய வேண்டாம்!

ஆதார் கார்டில் உள்ள தகவல்களைக் குறிப்பிட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ரகசிய பாஸ்வேர்ட் (OTP) மூலம் தகவல்களை உறுதிசெய்தால் போதும்.

ஆன்லைனில் கட்டணமின்றி ஈ-பான் கார்டு வாங்கும் வசதி விரைவில் அறிமுகம்.ஆதார் எண் இருந்தால் உடனே பான் கார்டு கிடைத்துவிடும்.ஆன்லைன் வழிமுறையில் உடனடியாக பான் கார்டுகளை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.ஆதார் தகவல்கள் மூலம் உடனடியாக ஆன்லைனில் பான் கார்டு பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய மத்திய அரசு ஆயத்தம் செய்துவருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த வசதி நடைமுறைக்கு வரும் என தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் கார்டு தொலைந்துவிட்டால்,மாற்று பான் கார்டு வாங்குவதும் மிக எளிதாகவிடும்.மேலும் ஈ-பான் கார்டு பெற எந்த கட்டணமும் பெறப்படாது. ஆதார் கார்டில் உள்ள தகவல்களைக் குறிப்பிட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ரகசிய பாஸ்வேர்ட் (OTP) மூலம் தகவல்களை உறுதிசெய்தால் போதும்.இந்த முறையில் பெயர், முகவரி, தந்தை பெயர், பிறந்த தேதி போன்றவை ஆதார் மூலம் உடனடியாக ஆன்லைனிலேயே சரிபார்க்கப்படுகிறது. எனவே எந்த ஆவணங்களையும் அப்லோடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

பான் கார்டு உருவாக்கப்பட்டதும் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்ட ஈ-பான் கார்டு, க்யூ.ஆர். கோடுடன் கிடைக்கும். க்யூ-ஆர். கோடு மோசடி வேலைகளுக்கு உதவாத வகையில் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என இது பற்றி அறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.எட்டு நாட்களுக்கு சோதனை முறையில் இந்த வழிமுறையை முயற்சித்தபோது, 62 ஆயிரம் ஈ-பான் கார்டுகள் கொடுக்கப்பட்டன. சில வாரங்களில் இந்த வசதி அனைவருக்கும் கிடைக்க உள்ளது. பான் கார்டு வாங்குவதற்காக அலைவதைத் தவிர்க்கும் விதமாகவும் டிஜிட்டல்மயத்தை விரிவாக்கும் நோக்கிலும் இந்த வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஆதார் தொடர்பான உத்தரவில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அனுமதித்துள்ளது. இதனையடுத்து பான் கார்டு – ஆதார் இணைப்பு கட்டாயமாகியுள்ளது. மிகப்பெரிய தொகையை அனுப்புவதற்கு பான் கார்டு எண்ணைக் குறிப்பிடுவது அவசியம். இதுவரை பான் கார்டு இல்லாதவர்களுக்கும் ஆதார் விவரங்களை வைத்து உடனே பான் கார்டு கொடுக்கப்பட்டுவிடும்.