அவனே ஸ்ரீமன் நாராயணா…அதிக திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். !

அவனே ஸ்ரீமன் நாராயணா… திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். புஷ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சச்சின் இயக்கத்தில் நாயகனாக ரக்ஷித் நாயகியாக சார்லி நடித்திருக்கிறார்கள்.முற்றிலும் கற்பனையான கதை என்றாலும் காட்சிகளைப் பார்க்கும்போது நம்ப முடியாத அளவுக்கு காட்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குனர்.அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம்.அமராவதி கிராமத்தில் புதையல் இருப்பதாக ஒரு நாடக கோஷ்டி.ஒரு கொள்ளைக் கும்பல் என்று புதையலைத் தேடி புறப்படுகிறார்கள். இதற்கிடையில் அந்த ஊரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்ரீமன் நாராயணாவும் கிளம்புகிறார்.இதற்கிடையில் அந்த நாடக கோஷ்டியிடம் புதையல் சிக்கியதை அறிந்து அவர்கள் 6 பேரில் 5 பேரை சுட்டுக் கொல்கிறது.பேண்டு வாசிக்கும் நபரைக் கூட்டிச் செல்கிறது கொள்ளை கோஷ்டி.அந்த தலைவன் மூச்சிறைப்பு நோயால் அவதிப்படும் போது வேலைக்காரிக்கு பிறந்த ஜெயராமன் அப்பாவைக் கொன்று விட்டு தான் தலைவராகிறான். சொந்த மகன் துக்காராம் கோபித்துக் கொண்டு தனி கோஷ்டியாக புதையலைத் தேடுகிறான்.

காட்சிக்கு காட்சி திருப்பங்களாக இருப்பதால் கதை யூகிக்க முடியாத படி திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் சச்சின். கெளபாய் படத்திற்கான ஒளிப்பதிவை கரம்சாவ்லா கையாண்டிருக்கிறார்.கதாநாயகன் ரக்ஷித் காமெடியில் கலக்கி இருக்கிறார்.பத்திரிகையாளராக நடித்திருக்கும் நாயகி ஸ்டான்லி இடைவேளைக்கு முன்பு இன்ஸ்பெக்டரை கட்டிப்போட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.இடைவேளைக்கு பிறகு படம் ஸ்பீட் எடுக்கிறது.விக்ரம் மூர்-ன் சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைக்கதையை 7 பேர் கொண்ட தி செவன் ஆட்ஸ் குழு எழுதியுள்ளார்கள். இது மாதிரியான படங்கள் வந்து நாளாகி விட்டது.இதற்கென ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜனீஷ் மற்றும் சரண்ராஜ் இசையில் இரண்டு பாடல்கள் இருக்கிறது.இதில் நடித்த நடிகர்கள் உயிரைக் கொடுத்து நடித்துள்ளனர்.தமிழ் திரை உலகில் நீண்ட நாட்களுக்கு பிறகு அட்வெஞ்சர் படம்.