அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்படும் கல்லறைகள் ?

வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் அதிகமாகி கொண்டே இருப்பதால், இறுதிச்சடங்கு நடத்தும் கூடங்கள் பிணங்களால் நிரம்பி வழிகின்றன. சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே இருப்பதால் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பலதும் திணறி கொண்டு வருகின்றன. இதில் தற்போதும் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின் நாட்டிற்கு அடுத்து அமெரிக்கா தான் விபரீதத்துக்குள்ளாகியுள்ளது .

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 2 லட்சத்து 45 ஆயிரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6098 பேர் உயிரிழந்தும் 10,441 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நியூயார்க்கில் மட்டும் 1500 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்குள்ள கல்லறைகள், தகனக்கூடங்கள் ஆகியவை ஒரு வாரம் அல்லது சில நேரங்களில் 2 வாரங்களுக்கு முன்பே கூட முன்பதிவு செய்யப்படுவதாக, ப்ரூக்கிளின் கல்லறை உரிமையாளரான பேட் மோர்மா கூறியுள்ளார் . அதிலும் தற்போது அதிகரித்து வரும் பிணங்களை கையாள முடியாமல் அமெரிக்கா திணறி வருவதுடன் கல்லறை, தகனக்கூடங்கள் கிடைக்காமல் அந்த கூடங்களுக்கு வெளியே டிரக்குகளில் குளிர்சாதனப் பெட்டி அமைத்து பிணங்களை வைத்துள்ளனர்.

Related posts:

30 – 45 வயதுடையோருக்கு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எது..!

ஊரடங்கு உத்தரவுக்கும் 144 தடை உத்தரவுக்கும் என்ன வேறுபாடு?

சென்னையில் 24,000 சதுர அடியில் அமேசான்.இன் விநியோக நிலையம் !

ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரி வசூலிக்க மத்திய அரசு திட்டம்..!

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ் !

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?

இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்? ஐ.நா எச்சரிக்கை ?