தி நகரில் அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி முகாம் !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அனைத்து வங்கிகளோடு இணைந்து வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி என்கிற ஒருங்கிணைந்த நிகழ்ச்சி திநகர் பாண்டிபஜாரில் உள்ள விஜயா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநரும், முதன்மைச் செயல் அலுவலருமான கர்ணம் சேகர் துவக்கிவைத்தார்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் முத்ரா கடனுதவி திட்டம் மற்றும் இதர கடனுதவித் திட்டங்களின் கீழ் சில்லரை விற்பனையகம்.விவசாயம்.சுயஉதவிக்குழு வாகனக்கடன், வீட்டுக்கடன், சிறுகுறு தொழில்முனைவோர் கடன், கல்விக்கடன், தனி நபர் கடன் சுமார் 1150 பேருக்கு வழங்க அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டது.நேற்று தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது.இன்றைய நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரி சுசில் சந்தா மொஹந்தா நன்றி கூறினார்.