வீடுகளை வாடகைக்கு விடுவோர்,2 மாத வாடகையைத்தான் முன்பணமாக வாங்கணும்!

வீடுகளை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகையை மட்டுமே, முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக பெற வேண்டும்’ என,மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், வாடகை வீட்டு வசதியை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசு துவக்கியுள்ளது.இதில், வாடகை வீட்டு வசதி மாதிரி சட்ட வரைவை, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு அனுப்பியுள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், ‘நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் உரிமைகள், பொறுப்புகள் சட்டம் – 2017’ நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், பல்வேறு திருத்தங்களுக்கு பின், பிப்ரவரி, 22ல் அமலுக்கு வந்துள்ளது.இதற்காக, 32 மாவட்டங்களிலும் வாடகை வீட்டுவசதி ஆணையம், வாடகை தொடர்பான வழக்குகளுக்காக, 32 நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வாடகை தீர்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதற்குமான மாதிரி வாடகை வீட்டுவசதி சட்டத்தை, மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மீது, பொது மக்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.இந்த மாதிரி சட்டத்தில், வாடகைதாரர்களின் உரிமைகளுக்கு இணையாக, நில உரிமையாளர்களின் உரிமைகளுக்கும், பாதுகாப்பு அளிக்கும் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, வீட்டை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகைக்கு இணையான தொகையை மட்டுமே முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக வசூலிக்க முடியும்.

வாடகையை உயர்த்த வேண்டும் என்றால், அது குறித்து, குடியிருப்போருக்கு, மூன்று மாதங்களுக்கு முன் அறிவிக்க வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், வாடகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், அவருக்கு அபராதம் விதிக்க, இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதன்படி, ஒப்பந்த காலத்துக்கு பின், ஒவ்வொரு மாதத்துக்கும், இரு மடங்கு வாடகையை, உரிமையாளர் வசூலிக்க முடியும். பெருநகரங்களில் வணிக நோக்கில், வாடகை வீட்டு வசதி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Related posts:

”’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!

எப்பா.. இந்த ஆதித்யா வர்மா படத்தாலே எனக்கு ஏகப்பட்ட டென்ஷன் - விக்ரம் பேச்சு!

இந்தியாவில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை!

*திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!*

எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’ ஜியோஹாட்ஸ்டாரில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது!

திவால் சட்டம் அமலுக்கு வந்த பின் வாராக் கடன்களுக்கு தீர்வு!

கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி!

"’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்து, என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது"- நடிகை அம்மு அபிராமி!