சீன ரஷ்ய எல்லையிலுள்ள சூஃபென்ஹேயில் கொரோனா தொற்று அதிகரிப்பு ?

இன்றுவரை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக அளவில் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சூஃபென்ஹேயில் கொரோனா மீண்டும் பரவத் துவங்கி உள்ளது. சீனாவில் இன்று மட்டும் புதிதாக 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,500 ஆகி உள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருவதால் சீனாவில் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

சீன ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள சூஃபென்ஹேயில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அது மற்றொரு வூகானாக மாறி வருவதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.கொரோனாவின் பிறப்பிடமான வூகானில் கொரோனா கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டாலும், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்துள்ள சீனர்களிடம் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தவிர, கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படாமல் 57 பேருக்கு புதிதாக சீனாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.இது வரை சீனாவில் மொத்தம் 82,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3,342 பேர் பலியாகினர். 77,816 பேர் குணமாகி உள்ளனர்

Related posts:

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் துணை மின் நிலையம் ! அமைச்சர் தங்கமணி உறுதி !!

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?

ஊரடங்கு நடவடிக்கை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள ஓராண்டாகும் ?

தங்க நகைகளுக்கு2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயம் ?

ரகுபதி ராகவ ராஜாராம் # வயலின் வித்துவான் # டி.எஸ்.கிருஷ்ணா # இன்னிசை

மாணவர்களுக்கு காலை உணவு தரும் அக்ஷயா பாத்ரா திட்டம் ! ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார் !!

தமிழக மின்வாரியத்தில் 7,000 கோடி ரூபாய் நஷ்டம்?: மின் கட்டணம் உயருமா?

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சாஹி நியமனம் !