Production No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர்!

காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார்.

இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு : சிவநேசன் S (Incredible Productions)
இயக்குநர்: சிவநேசன் S (காளிதாஸ் 1 தயாரிப்பாளர்)
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா
படத்தொகுப்பு: புவன் சீனிவாசன்
கலை இயக்குனர் – M.மணிகண்டன் B.F.A.,
புரொடக்‌ஷன் எக்ஸிகூயுடிவ் – V.முத்துகுமார்
புரொடக்‌ஷன் மேனேஜர் – I. ரமீஸ் ராஜா
காஸ்டுயும் டிசைனர் – கிஷோர்
ஸ்டில்ஸ் – ஜெயராமன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

சுவாரஸ்யமான கதை, திறமையான நடிகர்கள், திறம்பட பணிபுரியும் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாகும் இந்த திரைப்படம், திரைத்துறையில் புதிய அணுகுமுறையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts:

“’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது” - மிர்ச்சி விஜய்!

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

விதார்த் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு !

Samsung ‘Solve for Tomorrow’ Conducts First Ever Design Thinking Workshop to Develop Problem 1

சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது.!

நடிகர் சூர்யா நடிப்பில் 'கங்குவா' படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!*

"தலைநகரம் 2" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!