‘hi நான்னா’ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் ‘காஜு பொம்மா’ அக்டோபர் 6 வெளியீடு !

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் ‘காஜு பொம்மா’ அக்டோபர் 6 வெளியீடு

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ பான்-இந்தியா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘காஜு பொம்மா’ (Gaaju Bomma) அக்டோபர் 6 அன்று வெளியாகிறது.

இப்படத்தின் முதல் பாடலான ‘நிழலியே’ நானி மற்றும் மிருணால் தாக்கூர் ஜோடிக்கு இடையேயான அருமையான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி ‘hi நான்னா’ திரைப்படத்தின் இனிமையான இசைப் பயணத்தை தொடங்கி வைத்த நிலையில், இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு காணொலி ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தந்தை மற்றும் மகளுக்கு இடையே நடைபெறும் அரட்டையை வெளிப்படுத்தும் அழகு ததும்பும் இந்த காணொலியில், அப்பா-மகள் பாடல் எப்போது வெளியாகும் என்று கியாரா கண்ணா கேட்க, அவரை காஜூ பொம்மா என்று அழைப்பதோடு, இது தான் பாடலின் அடிநாதமாக அமையும் என்கிறார் நானி. ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ஷௌர்யுவ் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கின்றனர். முழு நீள குடும்ப படமான ‘hi நான்னா’, சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகிறது. அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். சதீஷ் ஈ வி வி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.
படக்குழுவினர்:
நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கண்ணா
இயக்கம்: ஷௌர்யுவ்
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் – சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Related posts:

’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’ !
“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” - நடிகர் ஆகாஷ் முரளி!
மின்மினி -- விமர்சனம்.!
தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலையை இழந்தால் உதவித்தொகை வழங்கப்படும் !
'கன்னி'-விமர்சனம் !
கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் !
'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது!