சோசியல் மீடியா

ஆங்கிலத்தில் ‘டேட்டிங்’ என்ற வார்த்தைக்கு இணையாக தமிழில் வார்த்தைகள் இல்லை ?

ஆங்கிலத்தில் ‘டேட்டிங்’ என்ற வார்த்தைக்கு இணையாக தமிழில் வார்த்தைகள் இல்லை ?

ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் தமிழில் அதே அர்த்தம் பொருந்திய வார்த்தைகள் இருக்கும் என்பதே தமிழறிஞர்களின் வாதமாக இருந்து வருகிறது. ஏனெனில் தமிழ் முதன்மையான, முதுமையான மொழி என்பதால் அந்த மொழியில் இல்லாத வார்த்தைகளே இல்லை என்பதுதான் அவர்களின் வாதம் ! இந்த நிலையில் ஆங்கிலத்தில் 'டேட்டிங்' என்ற வார்த்தைக்கு இணையாக தமிழில் வார்த்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் விளக்கம் அளித்தபோது தமிழில் 'டேட்டிங்' என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை இல்லாதது உண்மைதான். ஏனெனில் 'டேட்டிங்' கலாசாரம் தமிழகத்தில் இல்லை என்பதால் அந்த வார்த்தை இல்லாமல் உள்ளது என்று கூறிவருகின்றனர். தமிழில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த மொழியிலும் 'டேட்டிங்' என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.அதேபோல் தமிழர்கள் பாவம் எது ? புண்ணியம் ஏது ? என்று பகுத்தறிந்து வாழ்ந்தார்கள் என்றும் பாவம் என்பதற்கு ஆங்கிலத்தில்…
Read More
ஸ்மார்ட்போன் மூலம் மக்களின் தகவல்களை திருடும் ஆப்ஸ்!

ஸ்மார்ட்போன் மூலம் மக்களின் தகவல்களை திருடும் ஆப்ஸ்!

ப்ளே ஸ்டோரிலிருந்து சமீபத்தில் பல மால்வேர் ஆப்ஸ்களை கூகுள் நிறுவனம் தனது தளத்திலிருந்து தொடர்ந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த ஆப்ஸ்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை திருடுவதாகவும் அதுமட்டுமின்றி திருடிய தகவல்களைப் பிற ஆப்ஸ்களுக்கும் பகிர்வதாக அதிர்ச்சி தரும் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. மக்களின் தகவல்களை திருடும் ஆப்ஸ்களை கூகுள் நிறுவனம் அதன் ப்ளே ஸ்டோர் ஆப்ஸ்-லிருந்து சுமார் 1325 ஆப்ஸ்களை நீக்கியுள்ளது. இதில் சில ஆப்ஸ்கள் பயனர்களின் தகவல்களை நேரடியாகத் திருடியுள்ளது.இந்நிலையில் ஒரு ஆப்ஸ்-ஐ ஸ்மார்ட்போனில் டவுண்லோட் செய்தவுடன் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேலரி, காண்டாக்ட் போன்ற முக்கியமான விபரங்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். அனுமதி கொடுத்த பின்னர் பயனர்களின் தகவல்களை திருடியது மட்டுமின்றி அனுமதி கொடுக்காத பயனர்களின் தகவல்களையும் சேர்த்துத் திருடியுள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
Read More
சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு புதிய சட்டம் !

சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு புதிய சட்டம் !

வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்களுக்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ட்விட்டரில் தவறான செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் போலி கணக்குகள் மீது ட்விட்டர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. உலகம் முழுவதும், செய்திகளை வழங்கி வந்த ஆயிரக்கணக்கான போலி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளன என ட்விட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது என நீதிபதிகள் அதிரடி கேள்வி எழுப்பினர். தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க…
Read More
‘டெலிபோன் பூத்’ போன்று ‘வைபை’ சேவைக்கு திட்டம் !

‘டெலிபோன் பூத்’ போன்று ‘வைபை’ சேவைக்கு திட்டம் !

சிறிய கடைகள், உணவகங்கள் போன்றவை, 'வைபை' இணைப்பு சேவைக்கான, சில்லரை விற்பனையில் ஈடுபடுவதை அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.இது குறித்து, தொலை தொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன், 'டெலிபோன் பூத்' வைத்து நடத்தி வந்ததை போல, இப்போது வைபை இணைப்பை, சில்லரை விற்பனைக்கு வழங்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. முதலில் தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான, 'டிராய்' அமைப்பு தான், இத்தகைய வைபை சேவையை வழங்க, 'பப்ளிக் டேட்டா ஆபீஸ்' எனும், வர்த்தக மாதிரியை முன்மொழிந்தது. இதற்கு தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், அரசு இத்தகைய வைபை சில்லரை விற்பனையின் மூலம், விரைவில் நாட்டை டிஜிட்டல் மயமாக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளது. தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் எதிர்ப்பு குறித்து, டிராய் தலைவர், ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது: தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, புதிய…
Read More
மொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..? வந்துவிட்டது அடுத்த ஆபத்து..!

மொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..? வந்துவிட்டது அடுத்த ஆபத்து..!

மொபைல் போனில் பண பரிவர்த்தனை செய்யும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக இதனை கவனிக்க வேண்டும். இதில் உள்ள ஆபத்து குறித்து குற்றப்பிரிவு இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழிநுட்பம் வளர வளர அனைத்தும் நொடிப்பொழுதில் நம்கையில் கிடைத்து விடுகிறது. இருந்தாலும், அதுவே சில சமயத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் உணர வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மத்திய அரசு ஊக்குவிக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால், அதற்காகவே சில செயலியை மத்திய அரசே ஏற்படுத்தியும் கொடுத்தது.ஆனால் தற்போது பல தனியார் மையங்களால் உருவாக்கப்பட்டு உள்ள பல்வேறு செயலிகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துக்கொண்டு அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றனர். அவ்வாறு பதிவிறக்கம் செய்யும் போது, நம் வாங்கி கணக்கு முதல் பாஸ்வர்ட் வரை அனைத்தையும் அதில் சேகரிக்கப்படுகிறது. இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் பிரச்னை வரும் என்கிறார் அந்த உயர் அதிகாரி.…
Read More
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ?

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ?

தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் ஆதாரை வாங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதாரைப் பெற்றுக்கொண்டே புதிய சிம் வழங்குகின்றன. ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் ஆதாரை வாங்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய சிம் வாங்குவதற்கான அடையாளச் சான்றாக வாடிக்கையாளரிடம் ஆதாரைப் பெறக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இதேபோல வங்கிகள் புதிய கணக்குத் தொடங்க ஆதாரைப் பெறக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தது.இந்தத் தீர்ப்பு வந்து ஒரு மாதமாகியும் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதை மீறும் வகையில் ஆதாரைப் பெற்றுக் கொண்டே புதிய சிம் வழங்கி வருகின்றன.
Read More
பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி !

பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி !

வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இப்படியிருக்கையில், உங்கள் பாஸ்வேர்டை தாக்காளர்கள் (ஹேக்கர்) அறிந்துகொள்வதும் மிகவும் எளிது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துக்கொண்டாலே போதும், அவற்றைக்கொண்டு சாஃப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில். நம்முடைய பாஸ்வேர்டும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதேசமயம், அது திருட்டும்போகக் கூடாது. என்னதான் செய்வது? இலக்கணப் பிழை செய்யுங்கள் என்கின்றனர், ஆய்வாளர்கள். ஆம்! நீங்கள் இலக்கண பிழையோடு உங்கள் பாஸ்வேர்ட் உருவாக்கினால் அவ்வளவு எளிதில் அதனை ஹேக் செய்ய முடியாது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அஸ்வினி ராவ் தலைமையிலான ஆய்வுக்குழு நிரூபித்துள்ளது. இந்தக் குழு…
Read More