லாரி ஓட்டுவது எளிதல்ல? ‘கைதி’ பற்றி கார்த்தி !

‘கைதி’ படம் வெளிவந்துள்ளதற்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் நடிகர் கார்த்தி.அப்போது அவர் பேசுகையில்,”கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஓட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம்.லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்குத்தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல, லாரியில் ஏறி, இறங்குவதற்குக் கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போதுதான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போல உச்சம் தொட்டவர்கள் அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்தான். அது எப்பவும் நம்மைப் பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும்.ஆன்மிகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால், இயக்குநர் லோகேஷ் முதலிலேயே பட்டை போட வேண்டும் என்று கதையை எழுதிவிட்டார். நான் வீட்டிலிருந்து எப்போது கிளம்பினாலும் விபூதி பூசாமல் கிளம்பினது இல்லை. அது வளர்த்த விதமாகக் கூட இருக்கலாம். படம் பார்த்து விட்டு, என் நம்பரை எப்படியோ பிடித்து, குடும்பம் குடும்பமாகப் பேசுகிறார்கள். முடிந்தவரை எல்லோரிடமும் பேசி விடுகிறேன்.

என் அப்பா திரையரங்கில் ‘கைதி’யைப் பார்த்தார். சிறப்பான படம், அப்பா, மகள் செண்டிமெண்ட் அனைவரிடமும் வெற்றியடையும். மற்றும் திரையரங்கப் பார்வையாளர்களுக்கான படம் என்றும் பாராட்டினார். எனக்கும் ஒரு மகள் இருப்பதால் இப்படத்தின் கதாபாத்திரத்தோடு சுலபமாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.இயக்குநர் லோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக (கைதி 2) 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் முடித்து விடலாம் என்றார். அதுக்கு அவர் ரெடியாகதான் இருக்கிறார் என்றார் கார்த்தி.

Related posts:

"'டீசல்' படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது"- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திர...

'லெவன்' படத்திற்காக டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ !

GAUTHAM RAM KARTHIK & APARSHAKTI KHURANA TEAM UP FOR SCI-FI CRIME THRILLER ‘ROOT – RUNNING OUT OF TIME’!

முதலிடம் பிடித்த தென் சென்னை..! வீடு வாங்க தென் சென்னையை தேர்வு செய்த சென்னை மக்கள்..!

ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ !

தீரன் நடிக்கும் 'சாலா' டிரைலரை அல்லு அர்ஜுன் வெளியிடுகிறார்.!