நிதி பற்றாக்குறை ! 13,000 இணைப்பகங்களை மூடும் BSNL?

நாடு முழுவதும் 13,000 BSNL தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்!

ஊரகங்களில் உள்ள இந்த பெரும்பான்மை தொலைபேசி இணைப்பகங்களை மூடுவதால் BSNL நிறுவனத்திற்கு ரூ.3000 கோடி மிச்சமாகும் என இதற்கு விளக்கமளித்துள்ளது.

கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் BSNL நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் தத்தளித்து வரும் நிலையில், போதுமான செயல்பாட்டு மூலதனம் இன்மையால் பல இடங்களில் தனது சேவையை சரிவர வழங்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் செலவை மிச்சப்படுத்த குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த அதிரடி முடிவினை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

BSNL நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிறுவனத்தை தொடர்ந்து இயக்க 13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் BSNL கோரிக்கை வைத்துள்ளது.

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL தனியார் நிறுவனங்களின் கடும் போட்டியால் லாபமீட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. தனியார் நிறுவனங்கள் 2 ஆண்டுக்கு முன்பே 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, தற்போது 5ஜி சேவையைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் BSNL நிறுவனமோ இன்னமும் 3ஜி சேவையைத்தான் கொடுத்து வருகிறது. 2004-05க்குப் பிறகு இதுவரையில் BSNL வாடிக்கையாளர்களின் சந்தைப் பங்கு 10% குறைந்துள்ளது.

2018-19 நிதியாண்டு கணக்கின்படி BSNL நிறுவனத்துக்கு 14 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடனிலிருந்தும், வருவாய் இழப்பிலிருந்தும் BSNL-ஐ மீட்க மத்திய அரசு இதுவரையில் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதிக ஊதியம் வழங்க வேண்டியிருப்பது, மோசமான மேலாண்மை செயல்பாடு, நவீனமயமாக்கலில் பின் தங்கியிருப்பது போன்றவை இந்நிறுவனத்தின் இயக்கத்தை கூடுதல் சுமையாக்கியுள்ளது.

Related posts:

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு !

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்'!

டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!

விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் – சக்திவாய்ந்த நட்சத்திர கூட்டணியின் புதிய பரிமாணம்!

’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

டெட்பூல் & வால்வரின் இறுதி டிரெய்லரில் லோகனின் மகள் ரிட்டர்ன், லேடி டெட்பூல் மற்றும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது!

"'டீசல்' படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது"- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

பிளாக்பஸ்டர் படமான 'நெலும் குலுனா' (டென்டிகோ) / 'பெருசு' படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக ...