ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஆர்.பி. பாலா, பி.ஜி. முத்தையா தயாரிக்கின்றனர்

இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

‘லெவன்’ படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளை குவித்த நவீன் சந்திரா, தான் நடிக்கும் பாத்திரங்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறார். அவரது 51-வது படமான இது, ஒரு புதுமையான கதைக் களத்தை மையமாகக் கொண்டுள்ளது.

ஆர்.பி. பாலா பிலிம்ஸ், பி.ஜி. முத்தையா புரொடக்ஷன்ஸ் பேனர்களில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு திங்கட்கிழமை (அக்டோபர் 26) அன்று சென்னையில் நிறைவுற்றது. படம் சிறப்பாக உருவாகியிருப்பதை குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினர்.

ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைக்க, அஜய் மனோஜ் படத்தொகுப்பை கையாளுகிறார். கலை இயக்கம்: டி. கிராபோர்டு, ஸ்டண்ட்: டேஞ்சர் மணி, பாடல்கள்: மோகன் ராஜா, ஒலிப்பதிவு: ராஜா நல்லையா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன். அனீஷா ரெஹானா மற்றும் ஹகினோ ஷுன்சுகி கெவின் இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆவார்கள்.

ஆர்.பி. பாலா, பி.ஜி. முத்தையா தயாரிப்பில் ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதர பணிகளையும் முடித்து படத்தை திரையரங்குகளில் விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related posts:

'வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜின் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், "படை தலைவன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியிட்டார் !!

'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் 'பிளாஸ்ட்'!

”நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!

'ஹரா' படத்தின் மூலம் மோகனை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கிய விஜய்ஶ்ரீ ஜி, 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார்!

*தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்'' திரைப்படத்தின் முன்னோட்டம்!

"நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்"- 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!

‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!