ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்!

உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் *ONE MAN* திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார்.

ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரு ஆக்ஷன் படத்திற்கு இணையாகப் படமாக்கப்பட்டுள்ளன.

சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்த திரைத்துறை பிரமுகர்கள், தனி மனித உழைப்பையும் தாண்டி, இதன் கதையும், திரைக்கதையும், காட்சி அமைப்பும் சுவாரசியமானதாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் பார்க்கும் விதத்திலும் இருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.

படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருந்தாலும், படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனி கதாபாத்திரங்களாகவே மனதில் தோன்றுகிறார்கள். இவனிடம் இருந்து அவன் எப்படி தப்பிப்பான், அவனால் இவனுக்கு என்ன பிரச்சனை ஏற்படும் என்பது போன்ற கேள்விகளை எழுப்பும் வகையில் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக அமைந்துள்ளதாகவும், அதை ஒரே மனிதனாக இருந்து நிகழ்த்தியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் பாராட்டி வருகின்றனர்.

மேலும், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தான் எப்படி எடுத்தேன் என்பதை வேறு ஒரு கேமராவில் முழுமையாகப் பதிவு செய்து வைத்திருப்பது மேலும் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போலவே, ஒரு தனி மனிதனாகவும், தமிழனாகவும் தான் செய்த இந்தப் பெரும் சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும், வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி *ONE MAN* திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Related posts:

பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா!*!

பிரபல மருத்துவர் டாக்டர் யு.பி. சீனிவாசன் உருவாக்கியுள்ள 'ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு !

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”...நடிகர் அப்துல் லீ!

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங...

40 ஆண்டுகளுக்கு பின் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பி கொடுத்த தயாரிப்பாளர்!

SNAPCHAT SOLIDIFIES SOUTH INDIA FOCUS, LAUNCHES FLAGSHIP CREATOR CONNECT IN CHENNAI AMID 4X CONTENT GROWTH!

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் 'பிரமயுகம்'!

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன் வழங்கும் இரட்டை இன்னிசை மழை: கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி