அனீஷ் அஷ்ரப்  இயக்கத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமைய்யா, ரெடின் கிங்ஸ்லி,  மகேஷ்தாஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சென்னை பைல்ஸ் முதல் பக்கம்.

புகழ்பெற்ற காலம்சென்ற கிரைம் எழுத்தாளரின் மகன் வெற்றி. தன் தந்தையைப் பற்றிய ஒரு தொடருக்கான  விஷயங்களை சொல்ல சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்கு மதுரையிலிருந்து வருகிறார் வெற்றி.

அவர் தந்தையைப் பற்றிச் சொல்லச் சொல்ல பத்திரிகை நிருபர் ஷில்பா மஞ்சுநாத் அந்தத் தொடரை எழுதுகிறார்.

அதேசமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்க, அவருக்குப் பல வழக்குகளில் தன் கிரைம் மூளையை வைத்து உதவிகள் செய்கிறார்.

அதன் அடிப்படையில் மர்ம முறையில் இறக்கும் மாணவர்கள்,  இளம்பெண்கள் கொலையை துப்பறிய செல்லும் இடத்தில் அந்த தொடர் கொலையின் கொலையாளியை கண்டுபிடிக்கிறார். அவன் வெற்றியிடமிருந்து தப்பிக்க  முடிவில் கொலைகாரனை பிடித்தாரா?  இல்லையா?  தம்பி ராமைய்யா மகள் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வெற்றி கதையின் நாயகனாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் தொடர் எழுதுபவராக நன்றாகவே நடித்துள்ளார். போலிஸ் அதிகாரியாக தம்பி ராமைய்யா  கோடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்.

கொஞ்ச நேரமே வரும் ரெடின் கிங்ஸ்லி  சிரிக்க வைக்கிறார். வில்லனாக மகேஷ்தாஸ் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். சினிமாவில் நிலைப்பார்.

அரவிந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.  ஏஜிஆரின் இசை ரசிக்கவைக்கிறது.

காவல்துறை அதிகாரி தன் வழக்குகளில் எல்லாம் இன்னொருவன் மூளைப்படி செயல்படுவதும், எல்லா சமயங்களிலும் அவன் வாயையே பார்த்துக் கொண்டிருப்பதும்… “பாவம் போலீஸ்..!” என்று சொல்ல வைக்கிறது

Related posts:

சொர்க்கவாசல் படத்தில் என்ன ஸ்பெஷல் - ஆர்.ஜே. பாலாஜி ஓப்பன் டாக்1

”‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது” - யுவன் ஷங்கர் ராஜா!

ஏர்டெல், வோடபோன், ஜியோ தங்களது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.!

மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது!*

கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை ! சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் !!

*மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறைக்கு கொடுத்துவரும் ஆதரவால் மற்றொரு மைல்கல்லை சாதனை உருவாகியுள்ளது!*

“சந்திரமுகி 2” படத்திலிருந்து, கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !