கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா நிதியுதவி !

உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்கு அமெரிக்கா 5.9 மில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 45 கோடியே 14 லட்சத்து 9 ஆயிரம் சுகாதார நிதியுதவி வழங்கியுள்ளது.

வைரஸ் பரவல் தடுப்பு,பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு சிகிச்சை, அத்தியாவசிய பொதுச் சுகாதார செய்திகளைப் பரப்புதல், கரோனா நோயாளிகளைத் தடம் காணுதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்காக இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.மொத்தமாக 2.8 பில்லியன் டாலர்கள் கரோனா உதவித்தொகையின் ஒரு பகுதியாகும் இது, இதில் 1.4 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவுக்கு மருத்துவ உதவியாக அமெரிக்கா 20 ஆண்டுகளாக அளித்து வரும் தொகையில் உள்ளடங்கியதாகும் என்று அமெரிக்கா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசுத்துறை மற்றும் அமெரிக்க பன்னாடு வளர்ச்சி முகமை தற்போது 508 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக மருத்துவம், மனிதார்த்த மற்றும் பொருளதார மேம்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளது.
இது தவிர அரசு சாரா சமூக நல அமைப்புகளுக்கு உலகம் முழுதும் கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராட நிதியுதவி அளித்துள்ளது அமெரிக்கா.

இது போக ஆப்கானிஸ்தானுக்கு 18 மில்லியன் டாலர்கள், வங்கதேசத்துக்கு 9.6 மில்லியன் டாலர்கள், பூடானுக்கு 5 லட்சம் டாலர்கள், நேபாளுக்கு 1.8 மில்லியன் டாலர்கள், பாகிஸ்தானுக்கு 9.4 மில்லியன் டாலர்கள், இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர்கள் உதவித்தொகையை அமெரிக்கா வழங்கியுள்ளது.

Related posts:

ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரி வசூலிக்க மத்திய அரசு திட்டம்..!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.80 லட்சம் வழங்கிய ரோகித் சர்மா !

சென்னையில் கொரிய நாட்டு பாரம்பரிய இசை விழா !

தாமிரபரணி தண்ணீர் 20 ஆண்டுகளில் நஞ்சாக மாறும் அபாயம் ? நீரியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

ரகுபதி ராகவ ராஜாராம் # வயலின் வித்துவான் # டி.எஸ்.கிருஷ்ணா # இன்னிசை

'கொரோனா' பரிசோதனை இலவசம்' ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !!

வளர்ச்சிப் பாதையில் தமிழக மின் வாரியம்! 3 ஆண்டுகளில் 2,788 மெகாவாட் உற்பத்தி !!

குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...