75 சதவீதம் இந்தியர்களுக்கு காப்பீடு இல்லை ? மத்திய அரசின் தகவல்

இந்தியாவில் 75 சதவீத மக்கள் காப்பீட்டு திட்டத்தில் இணையவில்லை என்ற தகவல் மத்திய அரசின் புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

ஐரோப்பியா நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் 75 சதவீத மக்கள் காப்பீட்டு திட்டத்தில் இணையவில்லை.வருவாய் ஈட்டுபவர் இறந்தபின், காப்பீட்டால் பயன்பெறும் குடும்பம் 8 சதவீதம் மட்டுமே உள்ளது.இது ஒழுங்குபடுத்தப்படாத துறையின் விஷயத்தில் மிகவும் கடுமையானது .ஒழுங்குபடுத்தப்படாத துறையில் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் வருமான ஏற்றத்தாழ்வு, அபாயகரமான பணியிட நிலைமைகள் மற்றும் வயது முதிர்ச்சி ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.அதேசமயம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் காப்பீட்டில் சேர்ந்தால், இத்தகைய பாதிப்பை தவிர்க்கலாம்.இவ்வாறு அரசின் புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.75 சதவீதம் இந்தியர்களுக்கு காப்பீடு இல்லை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு காப்பீடு தேவை