மின்மினி — விமர்சனம்.!

சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் தான் மின்மினி.இப்படத்தை 8 ஆண்டுகளாக காத்திருந்து இயக்கி வருகிறார் ஹலிதா ஷமீம். நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியுள்ளார்.இதுவரை இந்திய சினிமாவில் இதுபோன்ற விஷயங்களை முயற்சி செய்யவில்லை. இதுவே முதல் முறையாகும் என சொல்லப்படுகிறது.இப்படத்தில் மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தை ஆங்கர் பே ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில், எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.  இப்படம் குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால் நடிப்பவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது 2015 ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உண்மையிலே அவர்கள் இளம் வயதினராக வளர்ந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு 7 வருடங்கள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அந்த ஆண்டே மொத்தப் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டது. இது திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத புதுமுயற்சியாகும் இது. 8 ஆண்டு காத்திருப்பு: இத்திரைப்படம் 8ஆண்டு காத்திருப்புக்கு பின், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். புதுமையான முயற்சி: அந்த வகையில் தரமான புதுமையான ஃபீல் குட் திரைப்படம் இதுவாகும். இப்படத்தில், இயக்குனர் ஹலிதா ஷமீமின் திரைக்கதை மேஜிக் போல் உள்ளது. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பர். கதிஜா ரஹ்மான் இசை அருமை. படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான்.மொத்தத்தில் மின்மினி தற்போதைய தமிழ் சினிமா அமைப்பில் புத்துணர்ச்சியூட்டும் படம். இது உணர்வுப்பூர்வமானது மற்றும் மனிதாபிமானது.

Related posts:

வாழை' படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன்சென்னை, இராயப்பேட்டை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் தமிழ்நாடு அரசின் ஆ...

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'!

பம்பர்--விமர்சனம் !

நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் ' ட்ராமா' ('Trauma') படத்தின் இசை வெளியீடு!

ZEE5 app-ல் போலீஸ் டைரி 2.0 வெற்றி பெறும் ! தயாரிப்பாளர் குட்டிபத்மினி நம்பிக்கை !

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான 'ஃபயர்' இசை வெளியீடு!