என்ன தான் ஓபி எஸ் தனிக்கட்சி தொடங்கணும்னு திட்டம் போட்டாலும் பாஜக திட்டம் வேற மாதிரியா இருக்குது.
ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்னொரு செய்தியும் வெடித்து கிளம்பி வருது.பொதுக்குழு தீர்ப்பு சமீபத்தில் வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் & டீம் பெருத்த அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளதாக தெரிகிறது.*பொதுக்குழு தொடர்பாக அப்பீலுக்கு இனி போனாலும்கூட, சிவில் வழக்குகளில் உடனே தீர்ப்புகள் வரப் போவதுமில்லை. அதனால்தான், தனிக்கட்சி என்ற யோசனையை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.*
பன்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர், என மூத்த தலைவர்கள் ஓபிஎஸ் பக்கம் இருந்தாலும்கூட, தன் பலத்தை நிரூபிக்க, இன்னும் அதிக ஆதரவுகள் ஓபிஎஸ்ஸுக்கு தேவையாக இருக்கிறது.*செப்டம்பர் 3ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களுக்கும் புரட்சி பயணம் போவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆதரவாளர்களை மட்டுமின்றி, அதிமுக நிர்வாகிகளையும் ஓபிஎஸ் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாராம்.
ஆனால், தற்போதைய நீதிமன்ற உத்தரவு காரணமாக, அதிமுக என்ற பெயரில் ஓபிஎஸ் இனிமேல், பயணிக்க முடியாது என்பதால், புதிய கட்சி துவக்குவது குறித்து, ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.*
அப்போது, “அம்மா திராவிட முன்னேற்ற கழகம்” என்பது உட்பட 3 பெயர்கள், புதிய கட்சிக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் கொடி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.*
அதிமுக கொடி நிறத்தில், சிறிய உருவிலான அண்ணா படம், கொடி நடுவில் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் செங்கோல் வழங்கும் படம் இடம் பெறும் வகையில், கொடியை வடிவமைக்க ஆலோசிக்கப்பட்டதாம். எனினும், புதிய கட்சியின் பெயர், கொடி போன்றவை இறுதி செய்த பிறகு, ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.*
இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த முடிவுக்கு, பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாம். “இப்போதைக்கு தனிக்கட்சி வேண்டாம், டிசம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள். தேவைப்பட்டால், தாமரை சின்னத்தில் போட்டியிடலாம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பிலிருந்தே பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.*
ஏற்கனவே, பொதுக்குழு தீர்ப்பு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பிலிருந்து சில முக்கிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவ தயாராகி விட்டார்களாம். இதை அறிந்து தான், தனிக்கட்சி என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார். ஓபிஎஸ்.*
ஆனால், இப்போது, பாஜக இவ்வாறு சொல்லி இருப்பது, பெருத்த நம்பிக்கையை ஓபிஎஸ்ஸுக்கு தந்துள்ளது. பாஜக எப்படியும் நம்மை கைவிடாது என்பதுடன், தன்னுடைய ஆதரவாளர்களையும் இபிஎஸ் பக்கம் செல்ல விடாது என்ற டபுள் நம்பிக்கை ஓபிஎஸ் தரப்பில் ஏற்பட்டுள்ளதாம்.*
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் சொல்லும் போது, “பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது என்று தொடுக்கப்பட்டுள்ள பிரதான வழக்கு, இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. இந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு பெறுவதற்கான, சட்டப் போராட்டத்தை தொடருவோம். அதுவரை, புதுக்கட்சி துவங்குவதற்கு வாய்ப்பு இல்லை.*
எங்களிடம், இப்போதைக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து விடக்கூடாது. வரும், 3ம் தேதி காஞ்சிபுரத்தில், புரட்சி பயணத்தை, ஓபிஎஸ் துவக்குகிறார். இரவில், 5,000 பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகளை அவர் அறிவிக்க உள்ளார்” என்கிறார்கள்.*
இந்நிலையில், இன்னொரு செய்தியையும் இங்கு நினைவூட்ட வேண்டி உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பே, பாஜக சீட் விவகாரங்கள் குறித்து ஒரு தகவல் வெளியானது.*
அதாவது, 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமாம். மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டுமாம். தங்களுக்கு ஒதுக்கப்படும் அந்த 20 தொகுதிகளை, தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்களாம். இப்படி ஒரு டீலிங்கை அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தியிருக்கிறது.தங்களுக்கு ஒதுக்கப்படும், அந்த 20 தொகுதிகளில், 13 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவும், மீதமுள்ள 7 தொகுதிகளை தங்களது கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது.*
அந்த 7 தொகுதிகள் யார் யாருக்கு தெரியுமா? ஓபிஎஸ் அணி + அமமுக டிடிவி தினகரன், தமாகா ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் போன்றோருக்கு தான் அந்த தொகுதிகளை வழங்க பாஜக கணக்கு போட்டுள்ளதாம்.*
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ அணிக்கு மட்டும் 2 இடங்கள், அதாவது ஓபிஎஸ் + ரவீந்திரநாத் என 2 சீட்களை கொடுக்கலாம், இவர்களை பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைக்கலாம் என்று கூறியதாம்*
இதையெல்லாம் கேட்டு, எடப்பாடி அப்படியே அதிர்ந்து போய் விட்டாராம். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்துக்கு உடனடியாக எந்த பதிலும் சொல்ல வில்லையாம்.*
2 மாதங்களுக்கு முன்பே இந்த சீட் விவகாரம் கசிந்தது என்றாலும், இப்போதும் இதே நிலைப்பாட்டில் தான் பாஜக உள்ளதாக தெரிகிறது.*
அதனால் தான், ஓபிஎஸ்ஸின் தனிக்கட்சிக்கும் தடை போட்டுள்ளதாக தெரிகிறது.*
ஆனால், பாதிக்கு பாதி என்ற ரேஞ்சுக்கு தொகுதிகளை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா? அதிலும், அதிமுகவின் வலுவான தொகுதிகளான கோவை, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளையே, பாஜக இந்த முறையும் கேட்க நேரும் போது, அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வாரா? ஓபிஎஸ்ஸை இப்போது வரை விடாமல், விரல் பிடித்து வரும் பாஜகவின் ஆதரவினை, எப்படி எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள போகிறார்? என்பதெல்லாம் தெரியவில்லை.*
மதுரை மாநாட்டை எடப்பாடி நடத்தி காட்டியதே, ஓபிஎஸ் + தினகரனை தவிர்க்க வேண்டும் என்பதை பாஜகவுக்கு உணர்த்துவதற்காகத்தான் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் அணி, காவியின் நிழலில் மீண்டும் புத்துயிர் பெறுவது மட்டும் உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.*

Related posts:

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' பட அப்டேட் !
சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா சொகுசு கார்களுக்கான ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம்!
ரெலிகேர் வழங்கும் புதிய காப்பீடு திட்டம் ‘சூப்பர் மெடிகிளைம்’ !
ஃபேஸ்புக் அக்கவுண்ட் லாக் இன் ஆகாத பட்சத்தில் இதை செய்து அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்யலாம் !
'ருத்ரன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் சரத்குமார்!
இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் 'அநீதி' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
'வார்2' படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது!
டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது!